பக்கம்:1921-சென்னை மீன் செய்குளங்களின் அறிவிப்பு புஸ்தகம்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

போன்ற சிறகுகளை மிக மெதுவாய் ஆட்டி, நீந்தும். அது அடிக் கடி நெடுநேரம் அசைவற்றிருக்கும். அப்பொழுது அது தன் அழ கைப்பார்த்து மகிழும்படி விரும்புவதுபோலிருக்கும். அது சிலவே ளைகளில் ஜலத்தில் உருளும். அப்பொழுது அதை எப்பக்கத்திலும் நன்றாய்ப் பார்க்கலாம். அது அசைவற்றிறுக்கும்பொழுது, அதின் இரகுகள் மெதுவாய் அசைந்துக்கொண்டிருக்கும். அப்பொழுது, கல்லில் சிவந்து பழுப் பாயுள்ள கடற்பாசி அசைந்துக்கொண்டிருப்பதுபோல் தோன்றும். இதுபற்றி,சிலர், இந்தவர்ணம் அவைகளை காத்துக்கொள்ளும்படி ஏற்பட்டதென்கிறார்கள். ஆனால் எனக்கு அப்படித்தோன்றவில் லை. கூர்மையான பார்வையுள்ள கடல வாசிகள் அவ்வளவு சுலபமாய் ஏமாந்துபோவதில்லை. இந்த நிறமும் உருவமும் உடைய மீன், ஆகாரத்திற்கு ஏற்றதல்ல விட்டுவிடுங்கள் வென் பதை எச்சரித்துக்காட்டும் குறிகளாயிருக்கலாம் என்று என்னுடை ய அபிப்பிராயம். இது நியாயமாயிருக்கலாமென்று தோன்றுகிறது. ஏனென்றால் இந்த மீன், வெறும் எலும்பாயும், அதின் முதுகு துடு ப்பின் முட்களால் அபாயகரமான காயம் உண்டாக்கத் தக்கதாயும், அம்முட்கள் விஷமுள்ளதாயும் இருக்கின்றன. இச்செய்குளங்களில் வேலை செய்பவர்கள், மரணமுண்டாக்கத்தக்க கடல் பாம்பைப்பார்க் கிலும், இந்த மீனைப்பிடிப்பதற்கு அதிகமாய்ப்பயப்படுகிறார்கள். ஒருவேளை, பாசிபோல் தோற்றமிருப்பது, அதற்கு வேறொரு காரியத்திற்கு அனுகூலமாயிருக்கும். ஏனென்றால், இம்மீனைத்தின் னும் பெரிய மீன்கள் ஏமாந்துபோகுமென்று நான் நினைக்கவில்லை. ஆனால், இக்கடல்பாசி இலைகளைத் தின்னும் சிறு மீன்கள், அத்தழை யென்று ஏமாந்துபோகக்கூடும். இச்சிறுமீன்கள் அதிக விஸ்தார மாய்த் திரிவதற்கிடமில்லாததினால், அசைந்துக்கொண்டிருக்கும், நாடாபோன்ற பழுப்பு வர்ணமான சிரகை கடல் பாசியிலைக்கொத்து என்று மயங்கி அதின் சமீபத்தில்போய் முடிவில் மரணமடைகின் றன. அதே குளத்தில் சில பெரிய கண்களையுடைய சிவப்பு மீன்களி ருக்கின்றன. அதற்கு முண்டக்கண்காக்காசி என்று பெயர், இந்த வகுப்பைச்சேர்ந்த பலவகையான மீன்கள் முன் ஒருகாலத்தில் வசித்து அவைகளின் உறுப்புகள் பூமியில் புதைந்து கிடப்பதாய் எடுக்கப்பட்டு, பூமியின் தத்துவவஸ்துக்களுக்குள்ள காட்சிசாலைகளில் வைக்கப்பட்டிருக்கின்றன, அவைகளுக்கு அடிக்கடி காற்றுக்கண் நோய் உண்டாகிறது, அவ்வாறிருக்கும்பொழுது, அவைகள் நேராய் இருக்கமுடியாது, தலையை மேலேவைத்துக்கொண்டு மிதப்பதற்கு பதிலாக வால்மேலேயும் தலைகீழாயும் தொங்குகின்றன. அதின் கண்ணில் ஒரு வினோதமான கறிய மரு இருக்கிறது, செவிள் மூடி யின் பின்பக்கத்திலும் வேறொன்றிருக்கிறது, ஒவ்வொரு இறகு முனையிலும் இவ்விதமான கறுப்பு மரு இருக்கிறது. பாம்பிரட் (Pomfret) என்று யாவருக்கும் நன்றாய்த்தெரிந்த மீனைப்போன்ற வௌவால் மீன் (Bat fish) என்று ஒரு வினோத மீனிருக்கிறது. அதில் கறுப்புவெளவால் மீன் அல்லது கறுப்பு சடக் கன் அதிக சாதாரணம். அதின் முன்னும் பின்னும் இருக்கும் சிற