பக்கம்:1921-சென்னை மீன் செய்குளங்களின் அறிவிப்பு புஸ்தகம்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

21 முக்கியமானவைகள். இது மலையாளத்தில் ஏராளமாய் அகப்படுகிறது. அங்கே இதற்குக் கோரா எனப் பெயர். சென்னைக்குச் சமீபத்தில் சிறுவகைகள் தான் ஏராளமாயிருக்கிறது. இதில் ஒரு வினோதமான காரியம் என்னவெனில் பெரிய மீன்கள் சாப்பிடுவதற்கு அதிக மேன்மையாக இருப்பினும், சிறுமீன்கள் மெதுவாகிய சதையுடன் உருசி கரமில்லாமலும் இருக்கின்றன. இதில் பெரிதாயிருக்கும் கத்தாளை மீன்களில் இருக்கும் காற்றுப்பை என்னும் பண்ணைகளை பூவிந்து நாகம் செய்வதற்காக காயவைத்து ஏற்றுமதி செய்கின்றனர்.

இதில் இன்னும் பலவிதமான மீன்கள் அப்போதைக்கப்போது வைக்கப்படுகிறது. அவைகளெல்லாம் எடுத்துச்சொல்வது பிரயோ ஜனமில்லை. அதனது வர்ணமும் உருவமும் போட்ட ஒருபடம் ஒவ்வொரு குளத்தின் மேல்பக்கத்திலுள்ள சட்டத்தில் எழுதப் பட்டிருக்கும். நெ. 7, குளம் இந்தக்குளத்தில், மிக வேடிக்கையாய் அலங்கரிக்கப்பட்டுள்ள, ரஸ்ஸல்ஸ் தேள்மீன் (Russell's Scorpion Fish) என்னும் தும்பி மீன் வைக்கப்பட்டிருக்கிறது. இம்மீனுக்கு இப்பெயர் கொடுத்ததற்கு காரணம் என்னவெனில், இந்திய மீன்களை, சாஸ்திர முறையாய் ஆராய்ந்தரிந்த முதல் ஆங்கிலேயராகிய, டாக்டர் ரஸ்ஸல் * என்பவரை கனப்படுத்தவே. சில காரியங்களை உத்தேசிக்கையில் இந்த மீன் தான் இந்த செய்குளத்தில் அதிக வினோதமாயும், மனதைக்கவரத் தக்கதாயும் இருக்கிறது. அதின் இரகுகள் நீந்துவதற்கு வேண்டிய அளவிற்கு அதிகமாய் பருத்து இருக்கிறது. ஆனால், அது மிகவும் மெதுவாய் நீந்தும் தன்மையும், சோம்பல் தன்மையுமுடையது. ஆகையால் அவ்வாறு அதிகமாய் பெருப்பதற்கு வேறுகாரணம் இருக்கவேண்டும். அந்த இரகுகளுக்கு ஆதாரமாயிருக்கும் எலும்புக்கம்பிகள் அதிகமாய் நீண்டிருப்பதுமல்லாமல், அக்கம்பிகளின் இடையிலிருக்கும் மெல்லியதோல் மிகவும் அதிகமாய் அகண்டிருப்பதால், பார்வைக்கு, விக்டோரியா காலத்திலுள்ள பெண்பிள்ளைகளின் உடையின் ஓரத்தில் தைத்திருப்பதைப்போலிருக்கிறது. அந்த மீனுக்கு எலும்பு முட்கள் செறிந்திருக்கிறது. ஏனென்றால், சிரகின் ஓரங்களுக்கு அப்பாலும் அதிகமாய் எலும்புக்கம்பிகள் வளர்ந்திருக்கின்றன. அதின் முகத்தின் அடிஓரத்திலிருந்து இலைபோன்று ஒரு சதை முளைத்திருக்கிறது. தேகத்தில் வெள்ளை நிறத்தில் படர்ந்திருக்கும் பழுப்பு வர்ணம் இரகுகளிலும் படர்ந்து இரகு முடிவில் எலும்பின் முனைவரையிலும் எட்டியிருக்கிறது. எல்லாவற் றையும் சேர்த்துப்பார்த்தால் மனதைக்கவரத்தக்கதாய் இருக்கும். அந்த மீன் இயக்கம் அதிக மெதுவாயிருக்கும். அது நீந்தும்பொழுது, மிகவும் மெதுவாயும் பார்வைக்கு அழகாயும், வண்ணாத்தி பூச்சி

  • அவர் விசாகபட்டணத்தில் வேலையாயிருந்தபொழுது அவர் ஏராளமாய் பலவகை மீன்களைச்சேர்த்தார். 1803-ம் வருஷத்தில் ஈஸ்ட்-இந்தியா கம்பெனியார், கொரமாண்டல் கரை மீன்கள் (Fishes from the Coast of Coromandel) என்று பெயரிட்டு, இம்மீன்களில் 200, தினுசு அவர் விவரித்தபடி, பிரசுரஞ்செய்தார்கள்.