பக்கம்:1921-சென்னை மீன் செய்குளங்களின் அறிவிப்பு புஸ்தகம்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

________________

20 தியென பெயர்வைத்துளார்கள். அதாவது பிறர் துணியை உடுத்திக் கொள்ளும் வண்ணான் பெண்சாதி என ஒரு வினயமான குறிப்பு. அதை யாவரும் எளிதில் அறிந்துகொள்வார்கள். இந்த வண்ணா. தி மீன்கள் கரையிலுள்ள வண்ணாத்தி பூச்சிகளைப்போல் ஏராளமா யும் பலவிதமாயும் உள்ளன. சில மீன்களுக்கு பக்கத்தில் நீலநிற மும் அதில் வளைந்த வெள்ளைக்கோடுகளும் இருக்கும். வேறு மீன் களுக்கு பழுப்பு நிறமான தேகத்தில் பிரகாசமான நீலக்கோடு இருக் கும். அல்லது பழுப்பு நிறமான தேகத்தில் தோள்பக்கம் மஞ்சள் புள்ளிகளும், மஞ்சள் சிறகுகளும் இருக்கும். வேறு அனேக மீன் களுக்கு அகலமான கறுத்தகோடுகள் வளைந்து அல்லது நேராக வெ ள்ளை அல்லது மஞ்சளான தேகத்தில் குறுக்கே ஓடியிருக்கும். சடக்கன் மீன்கள் (Chaetodons) அதிக அழுத்தமான தோலை யும், அதிக பிரகாசமான வர்ணங்களையும் கொண்டிருக்கின்றன ; அதுபற்றி கண்காட்சிச் சாலையில் செத்தஜந்துக்களை தயாரிக்கும் நிபு ணர்கள் அதை விசேஷமாய் கொண்டாடுகிறார்கள். உலகத்திலே அநேக கண்காட்சி சாலைகளில் அதிகபிரகாசமாக வர்ணங்களிடப் பட்ட இம்மீன்கள் ஏராளமாய் இருக்கின்றன. அவைகள் கண்காட்சி சாலையில் வினோத வஸ்துக்கள் வைக்கப்படுமிடத்தில் வைக்கத்தகுந் தவைகள். க நாலுகண் மீன் என்றுசொல்லப்பட்ட ஒரு அன்னிய சேட்டோ டன் என்னும் மீனுக்கு வாலுக்கு முன்பக்கத்தில், பக்கம் ஒன்றுக்கு ஒவ்வொரு, பெரிய கண்ணிருப்பது ஒரு ஆச்சரியம். வெள்ளை நெல் பட்சிகள் எருமையின்மேல் இருக்கும் பூச்சியைத்தின்று எரு மையை ஆதரிப்பதுபோலவே இம்மீனுக்கு மற்ற மீன்களை ஆதரிக் கும் வழக்கமுண்டு. இவ்வாறு ஆதரிக்கப்படும் மீன்கள், இம் மீனின் செய்கையை நன்குணர்ந்து, இந்த நாலுகண் மீன்கள் தங்கள் வாயினுள்ளே இருக்கக்கூடிய பூச்சிகளைத் தேடிப்பிடிக்கும்படி தங்கள் வாயைப்பிளந்து, இம்மீனை அழைப்பதுபோல் காட்டுகிறது. கத்தாளைமீன் × 4. கத்தாளைமீன்களில் பல்வகைகள் இதில் வைக்கப்பட்டிருக்கின் றன. ஆகாரத்திற்கு உபயோகப்படும் இந்திய மீன்களில் அதிக