பக்கம்:1921-சென்னை மீன் செய்குளங்களின் அறிவிப்பு புஸ்தகம்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

________________





இந்தக்குளத்தில் சென்னைக்கருகாமையில் சாதாரணமாய் அகப் படும் பாரை மீன் சிலவேளைகளில் வைக்கப்பட்டிருக்கும். ஆனால் இவ்வாறு அடைத்துவைத்திருந்தால் அதிகநாள் உயிரோடிருப்ப தில்லை. அவைகள் மிகவும் வெண்மையான மீன்கள், சிலவேளைக ளில் அதன் சிரசில் மஞ்சள் வர்ணம் தெரியும். அவைகளுக்கு கானாங் கெளுத்தியைப்போல் அதிக நுட்பமான சிதழ்கள்உண்டு. அதற்கு முக்கியமான ஒரு அடையாளம் என்னவெனில் அதன் வாலில் இரு பக்கமும் வரிசையாக கேடகம்போன்ற எலும்பு தகடுகள் இருக்கும். இவைகளில் அதிக பருமனாக இருப்பவைகள் நன்றாய் விலையாகிற ஆனால் அவைகளை அதிக நல்ல மீன்களென சொல்லக்கூடாது. சிறு மீன்கள், சொறி (Jellyfish) யின் குடைபோன் ற வட்டமாயிருக் கும் தேகத்தின்கீழ் மறைந்துக்கொள்ளும் வழக்கமுள் ளவைகளாக இருக்கின்றன. து. நெ. 6, குளம். இந்தக்குளத்தில் கல்நவரை என்னும் ஒரு சிறிய மீன் இரு க்கிறது. அது ரோமாபுரியில் போஜனப்பிரியரான எபிகியரர்கள் (epicures) அதிக விசேஷமாய் விரும்பிச்சாப்பிடும் சிகப்புமல்லெட் (Red Mullet) என்னும் மீனுக்கு அதிகமாய்ச் சம்பந்தப்பட்டது. அதைப்போல் இதுவும் சாப்பிடுவதற்கு அதிக உருசிகரமாயிருக்கும். அவைகளுக்கு தாழ்வாய்களுக்கும்கீழே இரண்டு அழுத்தமான வெள் ளைமுட்கள் போன்ற தாடிகள் தொங்குகின்றன. அது சும்மாயிருக் கும்பொழுது அவை இரண்டும் பின்பக்கம் மடங்கியிருக்கின்றன. உபயோகத்திலிருக்கும்பொழுது அவைகள் இரை தேடுவதற் காக மணலைத்தோண்டுகின்றன. கடல் உள்ளே தரைமேல் அம் மீன் மெதுவாக நகர்ந்து செல்லும்பொழுது இந்த தாடிகள்போன்ற முட்கள் இரண்டு முறப்பான கால்களைப்போல மாரிமாரி நகருகின் றன. அதைப்பார்த்தால் அவைகள் அதைநடப்பதற்காக உபயோ கப்படுத்தப்படுவதுபோல் தோன்றும். அவைகள் உயிரோடு இருக் கும்பொழுது அவைகளின் நிறம் சிகப்பு மல்லெட் மீனைப்போலவே சிவந்த நிறமாகவும் அதிக மஞ்சள் கோடுகளோடும் இருக்கும். அ தின் சிதழ்களை எடுத்துவிட்டால் அதின் தோலின் பிரகாசமான சிவ ந்த நிறம் மிகவும் தெளிவாகத் தெரியும். ஐரோப்பிய வலையர்கள் அ தின் விலை அதிகமாகும் என்ற எண்ணத்தோடு அதன் சிதழ்களை யெடுத்துவிடுகின்றனர். என்ற அதிக பெரிதாகவும் கண்ணைக்கவரத்தக்க தோற்றமும் உடைய வை குள்ளிக்கோழி மீன் வகையைச்சேர்ந்த வண்ணாத்தி மீன்கள் தான். அவைகள் உஷ்ணதேசத்து மீன்களில் அதிக வேடிக்கை யான தோற்றமுடையவைகள். அவைகள் பவளக்குன்றுகளிலும் அதிகப்பிரகாசமான வர்ணங்களையுடைய கடல் விசிரிகள் கடல் பவளச்செடிகள் நிறைந்த மலைப்பாங்கான கடல் ஓரங்களிலும் வசிக்கும். அவைகளில் பெரும்பான்மை சிறுமீன்களாயிருக்கும். ஆனால் கண்ணுக்கு அழகான குள்ளிக்கோழி மீனோ நீலவரியும் மஞ் சள்வரியும் கலந்ததாய் ஒரு அடி நீளம் வளரும். திருநெல்வேலி க்கரையோரங்களில் வலையர்கள் இந்த அழகான மீனுக்கு வண்ணாத்