பக்கம்:1921-சென்னை மீன் செய்குளங்களின் அறிவிப்பு புஸ்தகம்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

________________

18 பட்ட மீன்களைப்போல் தோன்றும், அதின்வாலில் சதைபாகமாயு ள்ள ஒவ்வொரு பக்கத்திலும் நல்ல பலமான ஒரு முள் இருப்பதால் அதை எளிதில் தெரிந்துக்கொள்ளலாம். ஒவ்வொரு முள்ளும் முனையில் அதிகக்கூர்மையாக இருக்கிறது. அது நிமிர்ந்து நிற்கும் பொழுது தற்காப்புக்கு நல்ல ஆதாரமாயிருக்கிறது. மற்றவேளையில் சாதாரணமாக அம்முள் ஒரு கால்வாயில் மட்டமாக கிடக்கிறது. பலவித கோழி மீன்கள் இதில் வைக்கப்பட்டிருக்கின்றன. வரிக் கோழி மீன்கள் கொஞ்சம் நீல நிறமாகவும் மஞ்சள் கோடுள்ளவைக ளாயும் இருக்கின்றன. அவ்வகுப்பைச்சேர்ந்த வேறுவகை மீன்க ளோ நீட்டுப்போக்கில் பழுப்பு நிறத்தின்மேல் நீல நிறக்கோடுள்ள வைகளாயும் இருக்கின்றன. அவைகளுக்குக் கோபம் வந்தபொழுது அந்நிறம் அதிகப்பட்டு கறுப்பாகிறது. கோழி மீன்கள் சாதாரண மாய் சாந்தமும் தீங்கற்றவைகளாயும் இருக்கின்றன. ஆனால் அவை களுக்குக்கோபம் உண்டானால் அவைகள் அதிக அபாயகரமுள்ள வைகளாக ஆகின்றன. அவைகள் தங்களது வாலினடியிலுள்ள முட்களால் உண்டாக்கும் காயங்களுக்கு அங்குள்ள வேலைக்காரர்கள் பயப்படுகிறார்கள். யாளம் முள்ளிக்கோழி மீன், புள்ளிக்கோழி மீன் முதலிய வினோத மான மீன்களும் சில்சமயங்களில் இருப்பதுண்டு. அவைகளுக்கு னமான வரிக்கோழி மீனைவிட இவைகள் அதிக அபூர்வம். இவை களுக்கும் வரிக்கோ ழிமீனுக்கும் உள்ள வித்தியாசம் என்னவெனில் வைகளுக்கு வா விலுள்ள முட்கள் சிறிதாகவும் அதிக ஜாஸ்தியா கவும் இருக்கின் றன. இவைகளைத்தெரிந்துகொள்ளக்கூடிய அடை என்னவெனில் இரண்டு கண்களுக்கும் இடையில் அவை கள் நெற்றியிலிருந்து மூக்கைப்போல ஒரு எலும்பு முட்டு வெளி யில் பிதுங்கிக்கொண்டிருக்கும், அவைகளை ஒரு கூட்டமாகப்பார்த் தால் பார்வைக்கு அவைகள் ஒரு வினோதமாய்த்தோன்றும். அவை கள் மூடக்கூடா ததும் பிரகாசம் இல்லாததுமான கண்களால் பார்ப் பது அதிக மயக்கத்தையும் பயத்தையும் உண்டுபண்ணுகிறது. இம் மீன்களின் கூட்டத்தை இதை எழுதுகிறவர் ஒரு தடவை நீர்குளிக் கும் உடுப்பைப்போட்டுக்கொண்டு கடலில் அடியிலிருக்கும்போது பார்த்திருக்கிறார். து பவளக்கொடிகளிலிருக்கும் அதிக அழகான நிறங்களையு டைய, கிளி மீன்கள் அல்லது பச்சைக்கிளி மீன்கள் இங்கே மிக அழகானவைகளாய்க் காணப்படும்; பச்சை, நீலம், மஞ்சள், ஆகிய மூன்று நிறங்களும் கலந்து உலோகங்களைப் போல் பிரகாசிப்பதை க்கண்டு அவைகளைத் தெரிந்துக்கொள்ளலாம். இம்மூவர்ணமும் சேர்ந்து பிறைவடிவாயுள்ள அதின் அழகான மஞ்சள் நிறமான வா லையும் அதின் நிற வேற்றுமையையும் பிரகாசிக்கச்செய்கின்றது. அக்குளத்தில் மேயும் மற்ற மீன்கள், அந்தவாலைக்கடித்து கட்டை யாக்கிவிடுகின்றன. இந்த மீன் வகைறாக்களுக்கு பல் மிகவும் உரு தியானவை. ஏனென்றால் அவைகள், பவளக்கொடிகளைத் தின்கின் றன. அவைகள் சாப்பாட்டுக்கு அவ்வளவு உசிதமானவைகளல்ல.