பக்கம்:1921-சென்னை மீன் செய்குளங்களின் அறிவிப்பு புஸ்தகம்.pdf/3

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

[[|240px|1921-சென்னை மீன் செய்குளங்களின் அறிவிப்பு புஸ்தகம்.pdf/3|thumb|right]]<poem>

சென்னை, கடல் மீன் வைத்திருக்கும்

செய்குளங்கள்.

இது மீன் இலாகா மேலதிகாரியாகிய ஜேம்ஸ் ஹார்னல் (JAMES HORNELL, F.L.S., F.R.A.I.,). அவர்களால் இயற்றப்பட்டது. முகவுரை. இந்த மீன் செய்குளமானது, ஆசியாகண்டத்தில் ஒன்றே ஒன் றுதான் என்று சொல்லக்கூடிய பெருமைபெற்றிருக்கிறது. உண் மையிலேயே, ஜப்பான் தேசத்தில் அப்போதைக்கப்போது ஏற்ப டுத்தப்படும் சில நாட்களிருந்து போகிறவைகளைத்தவிர, சூயஸு க்குக் கிழக்கில், இதுதான் முதல் முதல் ஏற்படுத்தப்பட்டதென்று சொல்ல இடமுண்டு. சென்னை கண்காட்சி சாலை சூபரின்டென்டெண்டு வேலையிலி ருந்த, மிஸ்டர் இ. தர்ஸ்டன் (Mr. E. Thurston) என்பவர், தன் உத்தியோக முடிவில் இதை ஏற்பாடு செய்தார். இதை எழுதுகிற வராகிய நான், அவரோடு இக்குளங்கள் எவ்விதம் ஏற்படுத்தப்பட வேண்டுமென்பதைப்பற்றி யோசனை செய்து எனக்கு தெரிந்தவரை யிலும் நான் அவருக்கு எடுத்துச்சொன்னது எனக்கு ஞாபகமிருக்கி றது. அக்காலத்தில் நாளாவட்டத்தில், நானே அதற்கு சூபரின் டென்டெண்டு வேலை பார்க்கும் பொறுப்பை பெறுவேன் என்று நான் நினைக்கவே இல்லை. இதை, சென்னை இராஜாங்கத்தார் முதலில், நமக்கு சமீபமா யுள்ள கடலில் உள்ள ஜீவராசிகளைப்பற்றி ஜனங்கள் கொஞ்சம் தெரிந்துகொள்ளக்கூடியதாயும், நீர் வாழும் பிராணிகளின் தன்மைக ளின்னவென்று கற்றுக்கொள்ளும் படியாயும் ஏற்படுத்தினார்கள். ஆதியிலிருந்தே, இதற்கு அனேக ஜனங்கள் போகவே எங்கும் பிரசித்திப்பெற்றது. ஆகையால் அப்பொழுது சென்னை கவர்னராயி ருந்த ஸர் ஆர்தர் லாலி, என்பவர் 1912-வருசத்தில், இதை பெரிய தாகச் செய்யவேண்டுமென்று தீர்மானித்தார். அப்பொழுது மீன் இலாகா ஒன்று ஏற்பட்டிருந்தது. இதை எழுதும் நான், மீன் விஷயமாய் சரிவர ஆராய்ச்சி செய்ய, ஒரு மீன்செய்குளம் (aquarium) அவசியமென்று கேட்டுக்கொண்டதின் படி, கவர்ன் மென்டார், தற்காலத்திற்குத் தகுந்தபடி மீன் பரிசோதனை சாலை (Fisheries Biological Station) க்கு வேண்டிய அனேக பரிசோ தனை இடங்களையும், உத்தியோகஸ்தலங்களையும், அப்பொழுது ஏற்படுத்த நினைத்த புது செய்குளத்தோடு ஏற்படுத்தத்தீர்மானித்