பக்கம்:1921-சென்னை மீன் செய்குளங்களின் அறிவிப்பு புஸ்தகம்.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20

________________

தார்கள். அதற்காக பிளான்கள் போடப்பட்டிருக்கின்றன ; அது செய்து முடிப்பதற்கு சில வருஷங்களாகும் போலிருக்கிறபடி பால், இப்பொழுது இருக்கும் செய்குளத்தையே கூடியவரையில் விர்த்தி யாக்கி உபயோகப்படுத்தவேண்டியதாயிற்று.

இப்பொழுது இருக்கும் கட்டடம் 1909-ம்ஹ அக்டோபர்மீ 21. எல்லா ஜனங்களும் வந்து பார்க்க திறக்கப்பட்டது. சென்ற வருஷம் (1919) வரையில், அது, கண்காட்சி (Museum) சூபரின் டென் டெண்ட் பார்வையில் இருந்து வந்தது. அதன் பின் ஏப்ரல் மாதம் 1 தேதி, இரண்டு காரணம்பற்றி, அதை, மீன் இலாகா காரர் வசம் ஒப்புவித்துவிட்டார்கள். ஏனென்றால் இந்த இலாகா காரர்களுக்கு இவ்விடத்திலிருக்கும் ஆகார மீன்களைப்பற்றி ஆராய் ச்சி செய்வதற்கு செய்குளம் அவசியமாயிருக்கிறது. மேலும், மீன் களைச் சேர்த்துவைத்து மேற்பார்த்துவருவதற்கு அதிகமான வசதி கள் இவர்களிடம் இருக்கின்றன. இது இந்த இலாகாகாரர்களின் வசம் வந்த உடனே அவர்கள் செய்த பல முயற்சிகளில் விவரித்து விளம்பும் இந்த அறிவிப்புப் புஸ்தகத்தை வெளியிட்டது ஒன்று ; மற்றொன்று மின்சார விளக்குகளும் விசிரிகளும் வைத்ததும் தான.

கூடத்தில் நுழைந்தவுடன் இருபக்கத்திலும், பக்கம் 1 க்கு, அவ் வைந்து குளங்கள் காணப்படும். மத்தியில் தரை மட்டத்திலிருக்கும் நல்ல தண்ணீர் மீன் செய்குளமும் மேசைகளின் மேல் வைக்கப்பட்ட சில சிறு செய்குளங்களும் இருக்கின்றன. இக்குளங்களிலே தான் காட்சிக்காக வளர்க்கப்படும் மீன்களும் மற்ற பிராணிகளும் வைககப் பட்டிருக்கின்றன. இக்குளங்களில் இரண்டு வழியாய் காற்று அடை க்கப்படுகிறது. ஒரு பாகம், உயர்வான இடத்திலிருக்கும் தண்ணீர் தொட்டியிலிருந்து கடல் நீரை வடிக்கட்டி அக்குளங்களில் விழும்படி செய்தும், ஒரு பாகம் காற்றை நெருக்கிவைத்திருக்கும் யந்திரமூலமாய் குளத்தினடியிலிருந்து பல்லாயிரம் சிறுகுமிழிகளாகக் காற்றை நேரே விட்டும் காற்றடைக்கப்படுகின்றது. மிகச்சன்னமாய்ப் பகுக்கப் பட்ட காற்றோட்டம் போதுமானபடி வர குளத்தில் வடிக்கட்டும் வத்தி ஒன்று தொங்கவிடப்பட்டு பாரம் அழுத்த அவ்வத்தி வழியாய் காற்றுவிடப்படுகிறது. இவ்வுபாயத்தால், எப்பொழுதும் அதிக கூட்டமான பிராணிகள் வசிக்கத்தக்கதாய் நீரில் மிகவும் ஏராளமாய் காற்று வைக்கப்படுகிறது. இவ்வாறு இருப்பது மிகவும் அரிது; நடு சமுத்திரத்தில் கொஞ்சகாலத்திற்கு அவ்வாறு இருப்பதுண்டு. ஆனால், ஒவ்வொரு மீன் தேக நிலைமையின் மாறுதலுக்குத்தக்கபடி காற்றை போதுமானதாய் ஜாஸ்தி அடைப்பது கூடாமலிருக்கிறது. சில மீன்கள், காற்றுக்கண் (gas-eye) என்னும் முண்டக்கண்' வியாதியால் வருந்துகின்றன. இவ்வியாதி, காற்று சுவாஸாசயத்தின் வழியாய் உள்ளே சென்று அதிக ஜாஸ்தியாக இரத்த ஓட்டத்தில் கலப்பதினால் உண்டாகிறது. இவ்வியாதிக்கு வெளி அடையாளம் கண்கொஞ்சம் பிதிங்கி இருப்பது தான். இந்த வியாதிகண்ட சில மீன்கள் முடிவில் சவுக்கியம் அடைகின்றன. எல்லா மீன்களையும் சாதாரண கடல் தண்ணீ ரில் விட்டால் சீக்கிறம் சவுக்கியப்படுகின் றன. பெரும்பான்மையான மீன்களை குளத்திலேயே விட்டுத்