பக்கம்:1921-சென்னை மீன் செய்குளங்களின் அறிவிப்பு புஸ்தகம்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

30 நம்முடைய கடலில், நிறத்திலும், உருவத்திலும், பலவேறுபட்ட அநேகந்தினுசுகள் இருக்கின்றன. அதின் நிறம் மாறுங்குணம் அது எந்த ஜாதியென்று கணிப்பதை மிகக்கஷ்டமாக்கிவிடுகிறது. C இந்த குளத்திலுள்ள, எல்லா மீன்களும் ஏறக்குறைய புள்ளி யுள்ளவைகளாகவே யிருக்கும், அவைகளில் ஒன்றுமட்டும், எங்கும் நீலவர்ணமாயிருக்கும். இதுதான் ஊதா கலவாய் என்பது. நெ.8,9, குளங்களிலுள்ள, மஞ்சள் குறிகளுள்ள நீல மீன்களை, 10-வது குள த்திலுள்ள முழுதும் நீலமாயுள்ள மீனோடு ஒப்பிட்டுப்பார்த்தால், அதற்கு மீனாராய்ச்சி நூற்படி கொடுக்கப்பட்ட, "மஞ்சளும், நீலமுங் கலந்த செர்ரானஸ்" என்னும் பெயரின் பொருள் விளங்கும். நிற விஷயத்தில்தவிர, உருவத்திலும், மற்றக்குணங்களிலும் அவைக ளெல்லாம் ஒன்றாகவே இருக்கும். அவைகளெல்லாம் ஒரேவகை மீன்கள் தான். அதிக இளமையான மீனுக்கு இரகுகள், பிரகாச மான மஞ்சள் நிறமாயிருக்கும். மேல்முகவாயும் செவிள் மூடியின் ஓரமும் அந்த வர்ணமாகவேயிருக்கும். மத்திமமான உருவமுள்ள மீனுக்கு மஞ்சள் நிறமாயுள்ள பாகங்களெல்லாம் நிறம் மங்கித்தோன் றும். முற்றின மீன்களுக்கு, மஞ்சள் நிறம் அடியோடுப்போய்விடும். இந்த மீனைப்போல், வயதிற்குத்தகுந்தபடி நிறம்மாறுதல், வெகு அ பூர்வம். இந்த மூன்றுதரமுள்ள மீன்களையும், சேர்ந்தாற்போல் ஒரேகுளத்தில் வையாமல் மூன்று வெவ்வேறு குளங்களில் வைத்தி ருப்பதால், நிறமாறுதல் நன்றாய்த்தெரிகிறது. அதிகபருமனும், ஏராளமாயிருக்கும் மீன்களில் ஒன்றாகிய கலவா மீன், திருநெல்வேலி கடற்கரையோ ரமாயிருக்கிறது. அது வெளித்தோற்றத்தில் காட் (Cod) மீனைப்போலிருக்கும். அதை அடிக்கடி இந்திய பாறை காட் (Indian Rock Cod) மீன் என்பதுமு ண்டு. அம்மீன்கள், இந்தியாவின் தென்கோடி முனையிலிருந்து, நூறு பாவம் (fathom) ஆழமுள்ளவரையில் பரவியிருக்கும், கடின மான கடல் அடியில் வசிக்கின்றன. அதிக மீன் அகப்படக்கூடிய கன்னியாகுமரி முனைக்கருகில், நிராவியந்திர வலைப்போட ஆரம் பித் தால், அவைகளும், மற்ற கடற்பர்ச் மீன்களும், ஆயிரக்கணக்காக ஒரே நாளில் விற்பனைக்கு வரக்கூடும். மேசைமேல் இருக்கும் சிறு செய்மீன்குளங்கள். சாதாரணமாய், இதில் இருக்கும் மீன்கள் பலவகைப்பட்டன. கடலிலிருக்கும் வேடிக்கையான சிறுமீன்கள் இருக்கின் றன. இந்த மீன்களை, அதிக பசியுள்ள மீன்களிருக்கும் பெரிய குளங்களில்விட் டுவைத்தால், அவைகள் சீக்கிறம் நாசமாக்கப்படும். இவைகளில் பொதுவாய் கடம்பான்களும் பலவித வினோதமான நண்டுகளும், சிங்கார இரால்களும் கடல் தாமரைகளும் (Sea anemones) நட்க்ஷத் திர மீன்கள் முதலியவைகளும் இருக்கின்றன.