பக்கம்:1921-சென்னை மீன் செய்குளங்களின் அறிவிப்பு புஸ்தகம்.pdf/33

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31


சாதாரண கடற்குதிரை, சிறு கடல் குதிரை (Sea-horse) யும் சாதாரணமாயகப்படும். அது அக்குளத்தில் செய்யும் பல பழக்கங்களை விட அதினுடைய உருவந்தான் அதிக வேடிக்கையாயிருக்கும். சாதாரணமாய் அது அசைவற்றிருக்கிறது. அதின் கண்கள் பரபரப்பாய் அசைவதை யோசிக்கையில் அது காரியங்களை கவனித்து நோக்குந்தன்மையுள்ள தென்று தோற்றுகிறது. தான் அபாயமில்லாமல் நிற்பதற்கு தன் னுடைய மெல்லிய வால் நுனியை ஒரு செடியிலாவது, கடல் விசிரி யின் கிளையிலாவது சுற்றிக்கொண்டு நிமிர்ந்து உயர்ந்து நிற்கிறது. அதற்கு அதிக பந்துவாகிய குழாய் மீன்கள் என்று சொல்லப்பட் ட நீளக்குதிரைகள் (Pipe-fishes) சிலசமயங்களில் அதனோடு விட ப்பட்டிருக்கும். ஆண் தன் மனைவியிடும் முட்டைகளை தன் இரு பக்கமும் இருக்கும் பைபோன்ற ஒரு தோல் மடிப்பில் கொண்டு போகும். அதுதான் உண்மையில் குஞ்சுபொரிக்கும் பை. அந்த முட்டைகள், குஞ்சுபொரிக்கும் வரையில் அதிலேயே இருக்கும்.

ஓர் ஆண் கடல் குதிரை சென்ற டிசம்பர் மாதத்தில் தன் முட் டைப்பையிலிருந்து தன்னைப்போன்ற 200 சிறு குதிரைகளை வெளி யாக்கினது. ஆனால் அவைகள் 4 அல்லது 5 மில்லி மீடர் நீளந்தா ன் இருந்தன.