பக்கம்:1921-சென்னை மீன் செய்குளங்களின் அறிவிப்பு புஸ்தகம்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

32 சென்னையில் சாதாரணமாய் அகப்படும் வேறொரு சிறு மீன், தொப்பை மீன் (Angler-fish). ஐரோப்பா கடலில் அகப்படும் அதி ன் இனமான லோபியஸ் (Lophius) மீனைப்போல், அதின் முதுகி லிருக்கும் சிரகு ஒரு சிறு தூண்டிக்கோலைப்போலிருக்கும்; அதின் முனையில், தூண்டியில் இரை இருப்பதுபோல், மெல்லிய சிரகுகளை ப்போல் குஞ்சம் தொங்கும். இந்த இரண்டு மீன்களும் தூண் டில் போடுந்தன்மை, மிகவும் வித்தியாசப்படுகிறது. ஐரோப்பா வில் இருக்கும் பெரிய மீன், மற்ற மீன்களை ஏமாற்ற தன் தேகத்தை மண்ணில் மறைத்துக்கொண்டு, தூண்டிற்கோலை யும் இரைபோன்ற குஞ்சத்தையும் வெளியில் நீட்டிக்கொண்டிருக் கும். சென்னையிலிருக்கும் மீனோ மிகவும் சிறிதாயும் திரட்சியாயு மிருக்கும்; அது, பழுப்பு வரியுள்ள தனது மஞ்சள் நிற உடம்பை கடற்பாசியில் மறைத்துக்கொள்ள விரும்புகிறது. ஒரு புலி, நாணற் காட்டிலும் மூங்கில் புதரிலும் பதுங்கியிருப்பதுபோலவே அது அங்கேயே அசைவற்றிருக்கிறது. அசைவது, தூண்டிக்கோலும் குஞ்சமுந்தான். தூண்டிக்கோல், அடியில் கீலில் ஆடுகிறது.இரை போன்ற குஞ்சம், மற்ற சிறுமீன்கள், இரா, முதலியவற்றின் கண் களைக்கவரத்தக்கதாய், மேலும் கீழும் ஆடிக்கொண்டிருக்கும். தங் கள் ஆசைக்கிடங்கொடுக்கும் மீன்களெல்லாவற்றிற்கும் ஆபத்து தான்! அந்தச்சிறு தூண்டிக்காரமீன், தன் இரைக்குக்காத்திருக்கும் பொழுது கல்லைப்போல் அசைவற்றிருக்கும். இரையகப்பட்டசம யங்களில் அதின் வாயும் தொண்டையும் மிகவும் பரபரப்பாயிருக் கும். இரை, திறந்திருக்கும் வாயினுள் சென்ற க்ஷணத்தில் வாய் நாடி சடக்கென்று மூடிக்கொள்ளுகிறது. குஞ்சத்திற்கு மோசம் வருவதாய்க்கண்டால், தூண்டிக்கோல் மடங்கி, குஞ்சம்போலிருக் கும் முனை, அந்த கோலுக்குப்பின்னிருக்கும் பலமான இரண்டு சிரகு முட்களுக்கிடையிலுள்ள ஒரு சிறு குழியில் வந்து பதுங்கி விடும். ஏனென்றால் அது கடிப்பட்டுப்போனால் அது ஒரு பெருங் கேடாய் முடியும். அது எப்பொழுதும் அடியிலேயே வசிப்பதால், அதின் மார்பிலும் பின்பக்கமும் உள்ள சிரகுகள், கைபோன்ற முட்களாகமாறுகின்றன. அவற்றின் உதவியால், மணலிலும், சிறு கற்களிலும் அது ஊன்றி நகருகின்றது. அவைகள் சிலவேளைகளில் குளத்தில் முட்டையிடுகின்றன. அதிக ஜாஸ்தியாயும், மிக சிறிதாயும் இருககும் முட்டைகள் நிறமில் லாத ஒரு பிசின் பட்டையான துண்டில், வைக்கப்பட்டிருக்கின் றன. அது தாயின் உருவத்திற்கு அதிக பருமனாயிருக்கின்றது. 1919-ம் வருஷம் செப்டம்பர் மாதத்தில் இடப்பட்ட ஒரு துண்டை அளந்து பார்த்தபொழுது அது நீளத்தில் 91 அடியும் அகலத்தில் 64 அங்கு லங்களும் இருந்தது. இரண்டாவது வகை மீெனொன்றும் (A. numnifer) சென்னை யில் அகப்படுகிறது. ஆனால் அவைகள் மிகவும் குறைவாய் அகப் படுகின்றன. இதின் உடல் மெதுவாயும், வர்ணத்தில், ஒழுங்கில்லா த புள்ளிகளுடையதாயும் இருக்கின்றன. சுறாக்குட்டிகள், இந்தச்சிறு குளத்தில் இடைக்கிடையே வைக் கப்படும். சுறாமீன்களின் (Dogfishes) முட்டைகள் நரம்புபோல்