பக்கம்:1921-சென்னை மீன் செய்குளங்களின் அறிவிப்பு புஸ்தகம்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

33 ஒரு கயிற்றினால் தலைகளில் கட்டப்பட்டிருக்கும் பைபோன்ற கொம்புறைக்குள் பொரித்து வளருகின்றன. திருக்கை மீன்களும் தட்டையான பைபோன்ற முட்டைத்தோடிலிருந்து வெளியாகின் றன. ஆனால், சுறாமீன்களில் பெரும்பான்மையானவை மீன்குஞ் சாகவே வெளியிடும் தன்மையுள்ளவைகளான தால், வலையர்கள் ஒரு பெரிய சுறாமீனைக்கரைக்குப்பிடித்துவந்தால், ஒரு பெருங்கூட்ட மான சுறாக்குஞ்சுகள் அகப்படுகின் றன. உ சாதாரண இந்திய பேய்க்கடம்பான். கை கடல்வாழும் செந்துக்களிலெல்லாம் கடம்பான் அல்லது பிசாசு மீன் (Octopus or Devil- fish) தான் அதிக வேடிக்கையானது. அது இந்திய கடலில் சாதாரணமாய் அகப்பட்டாலும் அதிகமாய்ப்பருத் து வளருகிறதில்லை. நான் பார்த்தவைகளிலெல்லாம் அதிகப்பெரி து, ஒரு மனிதனுடைய, கைமுட்டியளவு பருமனும், கைகள் 20 அங்குலம் நீளத்திற்கு மேலிராமலுமிருந்தது. ஒரு அக்ரோட் அளவுள்ள உடலும் 3 அல்லது 4 அங்குல நீளமுள்ள களையுமுடைய சிறு கடம்பான்கள் அதிக விசேஷமாயிருக்கின் றன. தூண்டிக்கு இரை கட்டுவதற்காக, அதைமிகப்புத்திசாதுர்ய மாய், பாக்விரிகுடாவில் (Palk Bay) பிடிக்கிறார்கள். நத்தாங்கூட் டை அடிப்பக்கம் உடைத்துவிட்டு ஒருவரிசையாக நீட்டுப்போக்கில் கொஞ்சம் விட்டுவிட்டுக்கட்டி விடுகிறார்கள். இதை இராத்திரியெல் லாம் தண்ணீரில் அமிழ்த்திவைத்திருந்து, காலையில் அந்நத்தை யோடுகளில் நுழைந்திருக்கும், பிசாசு மீன்களைத்தேடி பிடிப்பார்கள். 5