பக்கம்:1921-சென்னை மீன் செய்குளங்களின் அறிவிப்பு புஸ்தகம்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

34 ஜப்பான் தேசத்தார், இதைவிட தேர்ந்தவிதமாய் பிடிக்கிறார்கள். இந்த நத்தாங்கூட்டிற்குப்பதிலாக, குறுகிய கழுத்தையுடைய, சிறு மட் கலயங்களை கட்டி பிடிக்கிறார்கள். பிசாசு மீன் (Octopus) மொலுஸ்கா (Mollusca) என்னும் பெருவகுப்பைச்சேர்ந்தது. பெர்லிநாட்டிலஸ் (Pearly Nautilus)க்கு நெருங்கிய சம்பந்தமுள்ளது. பின்சொன்னதின் வரிவரியாயு ள்ள கூண்டாயிருக்கும் சங்குகள், புசலடித்து ஓய்ந்தபின் நம்மு டைய கடற்கரையோரங்களில் சாதாரணமாய் அலைகளால் கொண்டு வந்து போடப்பட்டிருக்கும். ஆனால், கடம்பானே அநேககாலங்க ளுக்குமுந்தியே தாராளமாய் செல்வதற்கு இடைஞ்சலாயிருந்த அந் தக்கூட்டை நீக்கிவிட்டது. இவைகளை நல்ல உரிசகரமான சிற்றுண்டி யாகத்தின்னும் தங்கள் விரோதிகளாகிய பெரிய மீன்களுக்கு அகப் படாமற்றப்பியோட தங்களுடைய கூர்மையான கண்களையும், புத்தி சாதுரியத்தையுந்தான் நம்பியிருக்கின்றன. எச். ஜி. உவெல்ஸ் வெகு சாதுரியமாய் ருஜ --ப்படுத்தினதுபோல, பூமியிலுள்ளவர்களி ல், அதிகவலிமையுள்ள வகுப்பாரும், பிசாசுமீன் உருவத்தை நாளட வில் எளிதில் அடைந்திருக்கக்கூடும். நிச்சயமாகவே, திமிங்கலத் தையும்,சீல் என்ற கடல்யானையையும் தவிர, மற்ற கடல் வாழும் பிரா ணிகளையெல்லாம்விட பேய்க்கடம்பான் (Octopus) அதிக அறிவுள்ள ஜந்து. ஐரோப்பிய தினுசாகிய பெரிய கடம்பான்கள் ஒன்றோடொ ன்று சேட்டைசெய்து விளையாடுவதையும், அவைகளிருக்கும் குளத் திலுள்ள குழாக்களில் இடக்குசெய்வதையும், தங்கள் கைகளிலி ருக்கும் உருஞ்சும் குழாக்களைக் கழுவவேண்டும்போது அவைகளை சுத்திசெய்வதையும், அடியில் ஊர்ந்து போகும்பொழுது தன் னைச்சுற்றியிருக்கும் நிலமைகளுக்குத் தக்கபடி அதின் நிறத்தை மாற்றுவதையும் நான் பார்த்திருக்கிறேன். அவைகள் அபாயத்தில் அகப்பட்டுக்கொண்டால், சாதாரண இங்கி கடம்பான் (Cuttlefish) செய்யும் தந்திரத்தை செய்கிறது; அதாவது, தங்கள் தேகத்தில் இருந்து ஒரு கறுப்பு மையை வெளியில் கக்கி, தண்ணீரை கலக்கி அதின் மறைவில் தப்பியோடுகின்றன. அவைகளுக்கு எட்டு மெல் லிய கைகளிருக்கின்றன. அவை ஒவ்வொன்றிலும், இரண்டு வரி சை உரிஞ்சும் குழாக்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இவைக ளால் தங்கள் இரையை, முக்கியமாய் நண்டுகளை, பிடித்து இழுத்து வாயில் வைத்துக்கொள்ளுகின்றன. அவ்வாயில், ஏறக்குறைய கிளி மூக்கைப்போல ஒரு கறுப்பு கொம்பு மூக்கு இருக்கிறது. நமது தேசத்திலே, இந்துமத ஆசாரங்களிலே முக்கியமாய் உப யோகப்படும் திவ்விய சங்கங்கள் இங்கே அடிக்கடி காட்டப்படுகின் றன. இச்சங்குகள சென்னை ராஜதானி கடற்கரையிலே ஏராளமாக அகப்படுகின்றன. ஒ ஒவ்வொருவருஷமும், மீனிலாகாகாரர், இச்ச ங்குகளை கடலிலே மூழ்கி எடுக்கச்செய்து, வங்காளத்தில் வளையல் செய்பவர்களுக்கு விற்கின்றார்கள். இச்சங்கு தன் முட்டைகளை ஒரு விநோதமான ஆட்டின்கொம் பைப்போன்ற உருவம்படைத்த கொம்புறையிலே இடுகின்றது. ஒவ்வேறுறையும் பல அறைகளாக தடுக்கப்பெற்றுள்ளது. ஒவ் வொறு அறையிலேயும் பல முட்டைகள் இருக்கின்றன. அவை