பக்கம்:1921-சென்னை மீன் செய்குளங்களின் அறிவிப்பு புஸ்தகம்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

35 அங்குலம் நீளமான சங்குகளாக்குமட்டும் இங்கேயிருந்து பின் னர் அவ்வறையின் சுவரை கடித்து தின்று வெளியே சலத்தில்வந்து எதேய்ச்சையான ஜீவியத்தை ஆரம்பிக்கின்றன. திவ்விய பால்சங்கு × சங்கின்முட்டைகூடு X து. நண்டுகளும் அதற்கினமானவைகளும் இந்தக்குளங்களில் சரியாய் ஜீவித்திருப்பதில்லை. ஒருவேளை, நீரில் இரும்பு சம் மந்தப்படுவதினாலிருக்கலாம். வேளாவேளைகளில், சென்னைக்கு அப்பால், அனேக அழகான நீந்தும் நண்டு தினுசுகளிருக் கின்றன. இவைகளில் முதுகு ஓட்டில், பிரகாசமான மூன்று புள் ளிகளையுடைய நெப்டியூனஸ் சாங்கிநோலென்டஸ் (Neptunus sangui- nolentus) என்னும் சீவாலி நண்டும், நெப்டியூனஸ்பிலாஜிகஸ் (Neptu- nus pelagicus) என்னும் ஒலைக்கால் நண்டுந்தான் அதிகசாதாரண மாய்க்கிடைக்கும். பின் சொன்னவற்றின் ஆணும் பெண்ணும் அதிக வித்தியாசப்பட்டிருக்கும். ஆண் ஒரு பெரிய அழகான ஐந்து. அதின் கால்கள் கொஞ்சம் நீலவர்ணமாயிருக்கும். பெண்ணோ