பக்கம்:1921-சென்னை மீன் செய்குளங்களின் அறிவிப்பு புஸ்தகம்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

36 மங்கலான ஒலிவை நிறத்தில் வெள்ளைக்கோடுகள் குறுக்குநெடுக்கு மாய் ஓடியுள்ள தேகத்தையுடையதாயிருக்கும். சக்குலினா (Sacculi- na) என்னும் ஒருவித உடலிலொட்டும் பூச்சி, உடலுடன் சேர்ந்தா பர்ப்போல் மடக்கிக்கொள்ளும் அந்த நண்டின் சிறிய வாலின்கீழ் ஒட்டிக்கொள்ளுகிறது. அப்பூச்சி, கப்பல்ஒட்டு சிப்பி, ஏக்காரன் (acorn) ஒட்டுசிப்பிக்கு இனமானது. இந்தப்பூச்சி, ஒரு ஆண் நண் டில் ஒட்டிக்கொண்டால் அதின் அழகிய நீலநிறமாறி, பெண்ணிற் குள்ள மங்கலான வர்ணத்தைப் பெருகிறது. அந்தப்பூச்சி அந் நண்டின் தேகமெல்லாம், வேரோடுவதுபோல் சிறு குழாய்களைப் பரப்பி அவைகளின் வழியாய் இரத்தத்தையெல்லாம் உரிஞ்சி, அதி கமாய் அதை வளரவொட்டாமற்செய்கிறது.

கடல் தாமரையை சுமந்துசெல்லும் டோரிப்டார்சிப்ஸ் நண்டு.

சென்னையில் சாதரணமாய் அகப்படும் நண்டுகளில் வேறொரு தினுசு நண்டு, "டோரிப்பி டார்சிப்பிஸ்" (Dorippe dorsipes) என்பதுதான். அதின் விசேஷமென்னவென்றால், பிறபிராணிக ளுக்குள்ள தற்காக்கும் கருவிகளை தங்களைக்காப்பாற்றிக்கொள்ள உபயோகப்படுத்துவதில் அவைகள் காட்டும் அறிவே மிக ஆச்சர்யப் படத்தக்கது. வலைகளில் அவைகள் அகப்பட்டுக்கொண்டால், அது தான் நடக்கும் கால்களின் கடைசி ஜதைகளில், அல்லது தன் முது கின்மேல், ஒரு துவாரமுள்ள சிறிய சிப்பியைப்பிடித்துக்கொள்ளு வது வழக்கமாய்க்காணலாம்; அதின் மேல் வெளுத்த நிறமுள்ள கடல்தாமரை உட்கார்ந்திருக்கும். எல்லா கடல் தாமரைகளுக்கும் அதற்கு இனமாகிய, சொறிகளைப்போல, கொட்டுந்திறமையுண்டு. நண்டு இந்தக் கூட்டாளியைத் தூக்கிப்போவதால், ருசியுள்ள நண் டுக்காக அலைந்து திரியும் சிறுமீன்களை பயமுறுத்தப் போதுமானதா யிருக்கிறது. இச்சிநேகத்தால், கடல்தாமரைக்கும் இலாபம் உண்டு. ஏனெனில், நண்டுக்கு ஆகாரம் கிடைத்தபொழுது, அதைத்துண்டு துண்டாகக்கிழிக்கும்பொழுது, சிதறும் சிறு துணிக்கைகள் மிதந்து தாமரையின் கைகளுக்கு அகப்படுவதினால் அதற்கும் ஆகாரம்