பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-அகத்திணை, புறத்திணை-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உதாரணம்:- பொருளதிகாரம் - புறத்திணையியல் -

பயன்கொண் டொலிகிரை யோம்பிப் பழுதிலாப் பண்டம் பகர்ந்து- முழுதுண; ஓதி யழல்வழிபட் டோம்பாத வீகையான் ஆதி வணிகர்க் கரசு." [வெண்பா-வாகைய] வேளாண் மாந்தர்க்குரிய ஆறு மரபாவன :- உழவு, உழவொழிந்த தொழில், விருந்தோம்பல், பகடு புறந்தருதல், வழிபாடு, வேதமொழிந்த கல்வி. உதாரணம்:-- "சுழன்றுமேர்ப் பின்ன துலக மதனால் உழன்று முழவே தலை." (குறள் - கoகூக] "கருமஞ் செயவொருவன் கைதூவே னென்னும் பெருமையிற் பீடுடைய தில். " [குறள் - 8 0 உக] "இரவர ரிரப்பார்க்கொன் றீவர் கரவாது கைசெய்தூண் மாலை யவர்." [குறள் - க ஙரு] "பகடு புறந்தருநர் பார மோம்பி." [புறம்-கூரு] "இருக்கை யெழலு மெதிர்செலவு மேனை விடுப்ப வொழிதலோ டின்ன -- குடிப்பிறந்தார் குன்றா வொழுக்கமாக் கொண்டார் சுயவரோ டொன்றா வுணரற்பாற் றன்று." (நாலடி-குடிபிறப்பு-ச] "வேற்றுமை தெரிந்த நாற்பா லுள்ளுங் கீழ்ப்பா லொருவன் கற்பின் மேற்பா லொருவனு மவன் கட் படுமே." [புறம் - கஅங] கூகூ இவை ஆறும் வந்தவாறு காண்க. மறுவில் செய்தி மூவகை காலமும் நெறியின் ஆற்றிய அறிவன்தேயமும் - குற்ற மற்ற செயலையுடைய மழையும் பனியும் வெயிலுமாகிய மூவகைக் காலத்தினையும் நெறி யினாற் பொறுத்த அறிவன்பக்கமும். இறந்தகாலம் முதலாகிய மூன்று காலத்தினையும் நெறியினால் தோற்றிய அறிவன் பக்கம் என்றாலோ வெனின், அது முழுதுணர்ந்தோர்க்கல்லது புலப்படாமையின் அது பொருளன்றென்க. பன்னிருபடலத்துள் பனியும் வெயிலுங் கூதிரும் யாவும், துனி யில் கொள்கையொடு நோன்மை யெய்திய, தணிவுற் றறிந்த கணிவன் முல்லை என வும் ஓது தலின் மேலதே பொருளாகக் கொள்க. 39 அறிவன் என்றது கணிவனை. மூவகைக்காலமும் நெறியினா லாற்றுதலாவது, பக் லும் இரவும் இடைவிடாமல் ஆகாயத்தைப்பார்த்து ஆண்டு நிகழும் வில்லும் மின்னும் ஊர்கோளுந் தூமமும் மீன்வீழ்வும் கோள்நிலையும் மழைநிலையும் பிறவும் பார்த்துப் பயன்கூறல். ஆதலான் மூவகைக்காலமும் 'நெறியின் ஆற்றிய அறிவன்' என்றார். உதாரணம்:- "புரிவின்றி யாக்கைபோற் போற்றுவ போற்றிப் பரிவின்றிப் பட்டாங் கறியத்- திரிவின்றி