தொல்காப்பியம் - இளம்பூரணம் விண்ணில் வலகம் விளைக்கும் விளைவெல்லாங் கண்ணி யுரைப்பான் கணி." [வெண்பா-வாகை-உய] நால் இருவழக்கின் தாபத பக்கமும் - எட்டுவகைப் பட்ட வழக்கினையுடைய தாபதர் பக்கமும். அவையாவன:--நீராடல், நிலத்திடை கிடத்தல், தோலுடுத்தல், சடைபுனைதல், எரியோம்பல், ஊரடையாமை, காட்டிலுள்ள உணவுகோடல், தெய்வபூசையும் அதிதி பூசையும் செய்தல். உதாரணம்:- "நீர்பலகான் மூழ்கி நிலத்தசைஇத் தோலுடையாச் சோர்சடை தாழச் சுடரோம்பி- ஊரடையார் கானகத்த கொண்டு கடவுள் விருந்தோம்பல் வானகத் துய்க்கும் வழி."[வெண்பா - வாகை - ச்ச] "ஓவத் தன்ன விடனுடை வரைப்பிற் பாவை யன்ன குறுந்தொடி மகளிர் இழைநிலை நெகிழ்த்த மள்ளற் கண்டிகும் கழைக்க ண்ெடுவரை யருவி யாடிக் கான யானை தந்த விறகிற் கடுந்தெறற் செந்தி வேட்டுப் புறந்தாழ் புரிசடை புலர்த்து வோனே."(புறம் - உருக) "கறங்குவெள் ளருவி யேற்றலினிறம்பெயர்ந்து தில்லை யன்ன புல்லென் சடையோ டள்ளிலைத் தாளி கொய்யு மோனே இல்வழங்கு மடமயில் பிணிக்குஞ் சொல்வலை வேட்டுவ னாயினன் முன்னே." (புறம்- உருஉ] இவற்றுள்ளும் சிலவந்தவாறு காண்க. பால் அறி மரபின் பொருகள் கண்ணும்-பாகுபாடு அறிந்த மரபினையுடைய பொரு நர் பக்கமும். அஃதாவது, வாளானும் தோளானும் பொருதலும் வென்றிகூறலும் வாகையாம் என்றவாறு. வாளால் மிதுதல் வருமாறு "ஏந்துவாட் டானை யிரிய வுறைகழித்துப் போந்துவாண் மின்னும் பொருசமத்து வேந்தர் இருங்களி யானை யினமிரிந் தோடக் கருங்கழலான் கொண்டான் களம். [வெண்பா-வாகை - உசு மல்வென்றி வருமாறு:- (6 இன்கடுங் கள்ளி னாமூ ராங்கண் மைந்துடை மல்லன் மதவலி முருக்கி ஒருகான் மார்பொதுங் கின்றே யொருகால் வருதார் தாங்கிப் பின்னொதுங் கின்றே
பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-அகத்திணை, புறத்திணை-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/101
Appearance