பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-அகத்திணை, புறத்திணை-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருளதிகாரம் - புறத்திணையியல் நல்கினு நல்கா அ னாயினும் வெல்போர்ப் பொரலருந் தித்தன் காண்கதில் லம்ம பசித்துப் பணைமுயலும் யானை போல இருதலை யொசிய வொற்றிக் களம்புகு மல்லற் கடந்தடு நிலையே." [புறம்-அய] அனைநிலைவகையொடு-வாளானும் தோளானும் பொருது வேறலன்றி அத்தன் மைத்தாகிய நிலைவகையான் வேறலொடு. அஃதாவது, சொல்லான் வேறலும் பாட்டான் வேறலும் கூத்தான் வேறலும் சூதான் வேறலும் தகர்ப்போர் பூழ்ப்போர் என்பவற்றான் வேறலும், பிறவும் அன்ன. விரைந்து தொழில்கேட்கு ஞால நிரந்தினிது சொல்லுதல் வல்லார்ப் பெறின்." [குறள் - கூசஅ} இது சொல் வென்றி. "வண்டுறையுங் கூந்தல் வடிக்கண்ணாள் பாடினாள் வெண்டுறையுஞ் செந்துறையும் வேற்றுமையாக் - கண்டறியக் கின்னரம் போலக் கிளையமைந்த தீந்தொடையாழ் அந்நரம்பு மச்சுவையு மாய்ந்து." [வெண்பா - பெருந்திணை - கஅ] இது பாடல் வென்றி. "கைகால் புருவங்கண் பாணி நடைதூக்குக் கொய்பூங்கொம் பன்னாள் குறிக்கொண்டு-- பெய்பூப் படுகளிவண் டார்ப்பப் பயில்வளைநின் றாடுந் தொடுகழன் மன்னன் றுடி." [வெண்பா - பெருந்திணை-கஎ] இஃது ஆடல் வென்றி. NT EG "கழகத் தியலுங் கவற்று நிலையும் அளகத் திருநுதலாளாய்ந்து -- கழகத்திற் பாய வகையாற் பணிதம் பலவென்றாள் ஆய நிலைய மறிந்து [வெண்பா - பெருந்திணை -கச இது சூது வென்றி. பிறவும் வந்தவழிக்காண்க. எழுவகையான் தொகைநிலை பெற்றது என்மனார் புலவர்-ஏழ்வகையான் தொகை நிலை பெற்றதென்று கூறுவர் புலவர். (ஆங்கு என்பது அசை.] எரு கூதிர் வேனி லென்றிரு பாசறைக் காதலி னொன்றிக் கண்ணிய வகையினும் ஏரோர் களவழி யன்றிக் களவழித் தேரோர் தோற்றிய வென்றியுந் தேரோர் வென்ற கோமான் முன்றேர்க் குரலையும் ஒன்றிய மரபிற் பின்றேர்க் குரவையும் பெரும்பகை தாங்கும் வேலி னானும் அரும்பகை தாங்கு மாற்ற லானும் புல்லா வாழ்க்கை வல்லாண் பக்கமும் 2