பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-அகத்திணை, புறத்திணை-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருளதிகாரம் - புறத்திணையியல் வாண்மின் னாக வயங்குகடிப் படைந்த குருதிப் பல்லிய முரசுமுலுக் காக அரசராப் பனிக்கு மணங்குறு பொழுதின் வெவ்விசைப் புரலி வீசுவளி யாக விசைப்புறு வல்வில் வீங்குநா ணுதைத்த கணைத்துளி பொழிந்த கண்ணகன் கிடக்கை ஈரச் செறுவிற் றேநேராக விடியல் புக்கு நெடிய நீட்டிநின் செருப்படை மிளிர்த்த திருத்துறு செஞ்சாற் பிடித்தெறி வைவேற் கணையமொடு வித்தி, விழுத்தலை சாய்த்த வெருவரு பைங்கூழ்ப் பேய்மகள் பற்றிய பிணம்பிறங்குை பல்போர்க் கான நரியொடு கழுகுகளம் படுப்பப் பூதங் காப்பப் பொலிகளந் தழீஇப் பாடுவர்க் கிருந்த பீடுடை யாள தேய்வை வெண்காழ் புரையும் விசிபிணி வேய்வை காணா விருந்திற் போர்வை அரிக்குரற் றடாரி யுருப்ப வொற்றிப் பாடி வந்திசிற் பெரும பாடான் றெழிலி தோயுவு மிமிழிசை யருவிப் பொன்னுடை நெடுங்கோட் டிமயத் தன்ன ஓடை நுதல வொல் குநிலை யறியாத் துடியடிக் குழவிப் பிடியிடை மிடைந்த வேழ முகவை நல்குமதி தாழா வீகைத் தலைவெய் யோயே."[புறம்-நசுகூ] இஃது ஏரோர் களவழி . 46 'ஓஒ வுலமை யுறழ்வின்றி யொத்ததே காவிரி நாடன் கழுமலங் கொண்டநாள் மாவுதைப்ப மாற்றார் குடையெலாங் கீழ்மேலாய் ஆவுதை காளாம்பி போன்ற புனனாடன் மேவாரை யட்ட களுத்து."[களவழி -ங] இது போரோர் களவழி. "நளிகட விருங்குட்டத்து வளிபுடைத்த கலம் போலக் களிறுசென்று களன கற்றவுங் களனகற்றிய வியலாங்கண். ஒளிறிலைய வெஃகேந்தி அரசுப்ட வமருழக்கி உரைசெல் முரசுவெள்வி முடித்தலை படுப்பாகப் புளற்குருதி யுலைக்கொளீஇத்