பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-அகத்திணை, புறத்திணை-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ளஅ உதாரணம்:- தொல்காப்பியம் - இளம்பூரணம் "ஒழுக்கம் விழுப்பந் தரலா னொழுக்கம் உயிரினு மோம்பப் படும்." நடுவுகிலைமையாவது, பகைவர்மாட்டும் நட்டார்மாட்டும் ஒக்க நிற்கும் நிலைமை. உதாரணம்:- "சமன்செய்து சீர்தூக்குங் கோல்போ லமைந்தொருபால் கோடாமை சான்றோர்க் கணி.” (குறன்-க கவு) வெஃகாமையாவது, பிறர்பொருளை விரும்பாமை. உதாரணம்:-- "படுபயன் வெஃகிப் பழிப்பன செய்யார் நடுவின்மை நாணு பவர்." [குறள் - கஎஉ] புறங்கூறாமையாவது, ஒருவரை அவர் புறத்துரையாமை. உதாரணம்:-- "அறங்கூறா னல்ல செயினு மொருவன் புறங்கூறா னென்ற லினிது." (குறள்-கவுசு] தீவினையச்சமாவது, தீவினையைப் பிறர்க்குச் செய்தலை அஞ்சுதல், உதராணம்:- "தீவினையா ரஞ்சார் விழுமியா ரஞ்சுவர் தீவினை யென்னுஞ் செருக்கு.” (குறள் -உ 0 க) அழுக்காறாமையாவது, பிறர் ஆக்கம் முதலாயின கண்டு பொறாமையால் வரும் மனக்கோட்டத்தைச் செய்யாமை. உதாரணம்:- "ஒழுக்காறாக் கொள்க வொருவன்றன் னெஞ்சத் தழுக்கா றிலாத வியல்பு." [குறள் -கசுக] பொறையுடைமையாவது, பிறர் தமக்கு மிகுதியாகச் செய்தவழி வெகுளாமை, உதாரணம்: "மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தம் தகுதியால் வென்று விடல்." (குறள்-கருஅ] பிறவும் இந்நிகரனவெல்லாம் கொள்க. இடையில் வண்புகழ்க்கொடையும்- இடைதலில்லாத வளவிய புகழினைத் தரும் கொடையும். அஃதாவது,கொடுத்தற்கு அரியன கொடுத்தல். இதுவும் பாகுபாடு மிகுதிப்படுத லின் வாகையாயிற்று. உதாரணம்:- "மன்னா வுலகத்து மன்னுதல் குறித்தோர் தம்புகழ் நிறீஇத் தாமாய்ந் தனரே