தொல்காப்பியம் - இளம்பூரணம் உலகொடு நிலைஇய பலர்புகழ் சிறப்பிற் புலவர்பா டாது வரைகவென் னிலவரை புரப்போர் புண்கண் கூர இரப்போர்க் கீயா வின்மையா னுறவே. (புறம்- எஉ) இன்நகை மனைவி பேஎய் புண்ணோன் துன்னுதல் கடிந்த தொடாக்காஞ்சியும் இனிய நகையார்ந்த மனைவி பேய் புண்ணோளைக் கிட்டுதலைக் காத்த தொடாக்காஞ் உதாரணம்:-- 48 & 18 "தீங்கனிப் புறவமொடு வேம்புமனைச் செரீஇ வாங்குமருப் பியானையொடு பல்லியங் கறங்கக் கைபயப் பெயர்த்து மையிழு தெழுதி ஐயவி சிதறியாம்ப லூதி இசைமணி பெறிந்து காஞ்சி பாடி நெடுநகர் வரைப்பிற் கடிநறை புகைஇக் காக்க வம்மோ காதலந் தோழி வேந்துறு விழுமந் தாங்கிப் பூம்பொறி கழற்கா னெடுந்தகை புண்ணே" [புறம் - உஅக] நீத்த கணவன் தீர்த்த வேலின் பேர்த்த மனைவி ஆஞ்சியும் - தன்னை நீத்த கண வண் விடுத்த வேலினானே மனைவி தன் உயிரையும் பெயர்த்த ஆஞ்சியம். உதாரணம்:- உதாரணம்:- "கௌவைநீர் வேலிக் கடிதேகாண் கற்புடைமை வெவ்வேல்வாய் வீழ்ந்தான் விறல்வெய்யோன் - அவ்வேலே அம்பிற் பிறழுந் தடங்க ணவன்காதற் கொம்பிற்கு மாயிற்றே கூற்று.' (வெண்பா - காஞ்சி - உங] நிகர்த்து மேல் வந்த வேந்தனொடு முது குடி மகட்பாடு அஞ்சிய மகட்பாலும், ஒத்து மாறுபட்டுத் தன்மேல் வந்த வேந்தனொடு தன் தொல்குலத்து மகட்கொடை அஞ்சிய மகட்பாற்காஞ்சியும். நுதிவேல் கொண்டு நுதல்வியர் துடையாக் கடிய கூறும் வேந்தே தந்தையும் நெடிய வல்லது பணிந்துமொழி யலனே << இஃதிவர் படிவ மாயின் வையெயிற் றரிமதர் மழைக்க ணம்மா வரிவை மரம்படு சிறுதிப் போல அணங்கா யினடான் பிறந்த வூர்க்கே." [புறம் -கூகூ] கொண்டோன் தலையொடு முலையும் முகனும் சேர்த்தி முடிந்த நிலையொடு தொரைஇ ஈர் ஐந்து ஆகும் என்ப -தன்னைக் கொண்டான் தலையொடு தனது முலை வளையும் முகத்தையும் சேர்த்தி இறந்த நிலையும் கூடிப் பத்தாகும் என்பர் சிலர்,
பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-அகத்திணை, புறத்திணை-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/117
Appearance