பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-அகத்திணை, புறத்திணை-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உதாரணம் :- பொருளதிகாரம் புறத்திணையியல் "சிறியகட் பெறினே யெமக்கீம் மன்னே பெரியகட் பெறினே யாம்பாடத் தான்மகிழ்ந் துண்ணு மன்னே சிறுசோற் றானு நனிபல கலத்தன் மன்னே பெருஞ்சோற் றாலு கனிபல கலத்தன் மன்னே என்பொடு தடிபடு வழியெல்லா மெக்கிய மன்னே அம்பொடு வேனுழை வழியெல்லாங் தானிற்கு மன்னே நரந்த நாறுந் தன்கையாற் புலவகாறு மென்றலை தைவரு மன்னே அருந்தலை யிரும்பாண ரகன்மண்டைத் துளையுரீஇ இரப்போர் கையுளும் போகிப் புரப்போர் புன்கண் பார்வை சோர அஞ்சொனுண்டேர்ச்சிப் புலவர் காவிற் சென்றுவீழ்ந் தன்றவன் றிருகிறத் தியங்கிய வேலே ஆசா கெந்தை யாண்டுளன் கொல்லோ இனிப்பா டுகரு மில்லைப் பாடுநர்க்கொன் றீகுநருமில்லை பனித்துறைப் பகன்றை நறைக்கொண் மாமலர் சூடாது வைகியாங்குப் பிறர்க்கொன் றீயாது வீயு முயிர்தவப் பலனே." (புறம்- உஙரு] இன்னது பிழைப்பின் இது ஆகியன் என துன் அருஞ் சிறப்பின் வஞ்சினமும் இன்னவாறு செய்தலைப் பிழைத்தேனாயின் இன்னேன் ஆகக் கடவேன் எனக் கூறிய துன்னற்கு அரிய சிறப்பினையுடைய வஞ்சினக்காஞ்சியும்.[துணிவு பற்றி 'ஆகியன்' என இறந்த காலத்தாற் கூறினர்.] உதாரணம்: << நகுதக் கனரே நாடுமீக் கூறுக்கர் இளைய னிவனென வுளையக் கூறிப் படுமணி யிரட்டும் பாவடிப் பணைத்தாள் நெடுநல் யானையுந் தேரு மாவும் க்கு படையமை மறவரு முடையம் யாமென் றுறுதுப் பஞ்சா துடல்சினஞ் செருக்கிச் சிறுசொற் சொல்லிய சினங்கெழு வேந்தரை அருஞ்சமஞ் சிதையத் தாக்கி முரசமோ டொருங்ககப் படேஎ னாயிற் பொருந்திய என்னிழல் வாழ்நர் சென்னிழற் காணாது கொடியனெம் பிறையெனக் கண்ணீர் பரப்பிக் குடிபழி தூற்றுங் கோலேனாகுக ஓங்கிய சிறப்பி னுயர்ந்த கேள்வி . மாங்குடி மருதன் றலைவ னாக