உதாரணம்:- பொருளதிகாரம் - புறத்திணையியல் வெள்ளெட்சாந்தொடு புளிப்பெய் தட்ட வேளை வெந்தை வல்சி யாகப் பரற்பெய் பள்ளிப் பாயின்று வதியும் உயவற் பெண்டிரே மல்லே மாதோ பெருங்காட்டுப் பண்ணிய கருங்கோட் டீம மக்கரி தாகுவ தில்ல வெமக்கெம் பெருந்தோட் கணவன் மாய்ந்தென வரும்பற வள்ளித ழவிழ்ந்த தாமரை நள்ளிரும் பொய்கையுந் தீயுமோ ரற்றே. [புறம்-உசுகூ] அரும்பெருஞ் சிறப்பின் புதல்வன் பயந்த தாய் தபவரூஉம் தலைப்பெயல் நிலை யும் - அரும்பெருஞ் சிறப்பினையுடைய மகற்பெற்ற தாய் சாதற்கண் அவனைத் தலைப் பெயல் நிலையும்.[தலைப்பெயல் சேர்தல்.] மாம்.] "இடம்படு ஞாலத் தியல்போ கொடிதே தடம்பெருங்கட் பாலக னென்னுங் - கடன்கழித்து முள்ளெயிற்றுப் பேதையாள் புக்கண் முரணவியா வள்ளெயிற்றுக் கூற்றத்தின் வாய். [வெண்பா - சிறப்பிற் பொதுவியல்-ரு] மலர்தவை உலகத்து மரபு ஈன்கு அறியபலர் செல செல்லா காடுவாழ்த்தொடும்- இடம் அகன்ற உலகத்தின் மரபு நன்கு விளங்கப் பலரும் மாயத் தான் மாயாத புறங் காடுவாழ்த்துதலும். உதாரணம்:- ர்கக் "களரி பரந்து கள்ளி பொங்கிப் பகலுங் கூவுங் கூகையொடு பிறழ்வர் வீம விளக்கிற் பேஎய் மகளிரோ டஞ்சுவந் தன்றி மஞ்சுபடு முதுகாடு நெஞ்சமர் காதல ரழுத கண்ணீர் என்புபடு சுடவை வெண்ணீ றவிப்ப எல்லார் புறனுந் தான்கண் டுவகத்து மன்பதைக் கெல்லாந் தானாய்த் தன்புறங் காண்போர்க் காண்பறி யாதே." (புறம்- ஙருசு) மிறை அருஞ் சிறப்பின் இரண்டு துறை உடைத்து ஆக நிறையும் அருஞ்சிறப் பினையுடைய இரண்டு துறைகளையுடைத்து. [இச்சூத்திரத்தில் வந்த அத்தும் ஆனும் முறையே சாரியையும் இடைச்சொல்லு (ககூ) எஅ. பாடாண் பகுதி கைக்கிளைப் புறனே நாடுங் காலை நாலிரண் டுடைத்தே. இது, பாடாண்டிணை ஆமாறு உணர்த்துதல் நூதலிற்று
பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-அகத்திணை, புறத்திணை-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/120
Appearance