பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-அகத்திணை, புறத்திணை-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்பதும் அது. பொருளதிகாரம் - அகத்திணையியல் "இல்லொடு மிடைந்த கொல்லை முல்லைப் பல்லான் கோவலர் பைய ளாம்பல் புலம்புகொண் மாலை கேட்டொலுங் கலங்குங்கொ லளியணங்காத வேரனே." 86 'திருநகர் விளங்கு மாசில் கற்பின் அரிமதர் மழைக்கண் மாஅ யோளொடு நின்னுடைக் கேண்மை யென்னோ முல்லை இரும்பல் கூந்த னாற்றமு முருந்தேர் வெண்பல் லொளியுந் பெறவே." இது, முதற்பொருள் வாராது கருப்பொருளானும் உரிப்பொருளானும் முல்லையாயின் லாறு. (6 "கரந்தை விரைஇய தண்ணறுங் கண்ணி இளைய ரேவ வியங்குபரி கடைஇப் பகைமுனை வலிக்குந் தேரொடு வினைமுடித் தனர்கங் காத் லோரே." இது, முதலும் கருவும் இன்றி உரிப்பொருளான் முல்லையாயிற்று. "கதிர்கை யாக வாங்கி ஞாயிறு பைதறத் தெறுதலிற் பயங்கண் மாறி வீடுவாய்ப் பட்ட வியன்எண் மாநிலம் காடுகவி னெய்தக் கணமழை பொழி தலிற் பொறிவரி யினவண் டார்ப்பப் பலவுடன் நறுவீ முல்லையொடு தோன்றி தோன்ற வெறிவென் றன்றே வீகமழ் கானம் எவன்கொன் மற்றவ னிலையென மயங்கி இரும்பனி யுறைக்குங் கண்ணோ டினைபாங் கின்னாஅ விறைவி தொன்னலம் பெறூஉம் இதுமற் காலங் கண்டிசிற் பகைவர் மதின்மூடு கதவ முருக்கிய மருப்பிற் கந்துகா லொசிக்கும் யானை வெஞ்சின வேந்தன் வினைவிடப் பெறினே " [அகம் - கங.] இது, பிரிதற் பகுதியாகிய பாசை றப்புலம்ப லெனினும் நிலம்பற்றி முல்லையாயிற்று. மலிதிரை யூர்ந்துதண் மண்கடல் வௌவலின் ” [கலி-முல்லை-ச) என்னும் முல் லைக்கலி புணர்தற்பொருண்மைத் தாயினும் முல்லைக்குரிய கருப்பொருளான் வருதலின் முல்லையாயிற்று. பிறவும் அன்ன. குறிஞ்சித்திணைக்குச் செய்யுள்:- "விடிந்த ஞாலம் கவின்பெறத் தலைஇ இடிந்து வாய் வெவ்வங் கூர் நிலமலி தண்டுளி தவிராது புலந்தாய்