பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-அகத்திணை, புறத்திணை-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருளதிகாரம் - அகத்திணையியல் வேறல்ல மென்பதொன் றுண்டா லவனொடு மாறுண்டோ நெஞ்சே நமக்கு." (கலி-குறிஞ்- உசு] இதனுள் "வௌவிக் கொள்லு மறனெனக் கண்டன்று" எனவும், "நீர்க்கினி தென்றுண்பவோ மீருண்பவர்" எனவும் தவைமகன் கூறுதலானும், தலைமகள் முன் இழித் துரைத்தலானும், ஊடியுணர்வாள்போல உடன்பட்டமையானும், இஃது உயர்ந்தோர் மாட்டு வந்த கைக்கிளை. பெருந்திணை வந்தவழிக் கண்டுகொள்க. (25) உஎ . ஓதல் பகையே தூதிவை பிரிவே. மேல் கைக்களை முதலாக எழுதிணையு முணர்த்தினார், அவற்றுள் நிலம் பகுக்கப் பட்ட முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் என்னும் நான்கு திணையும் களவு கற்பு என் னும் இருவகைக் கைகோளிலும் நிகழ்தலின் அவற்றை யொழித்து நிலம் பகுக்கப்படாத கைக்கிளை பெருந்திணையும் பாலையும் இவ்வோத்தினுள் உணர்த்துகின்றன ராதலின், அவற்றுள் பாவைக் குரித்தாகிய பிரிவு உணர்த்துவான் பிரிவுக்கு நிமித்தம் ஆமாறு உண் ர்த்துதல் நுதலிற்று. இ-ள் - ஓதல் பகை தூது இவை பிரிவு-ஓதலும் பகையும் தாதும் என்று சொல் லப்பட்ட இத்தன்மைய பிரிவிற்கு நிமித்தமாம். தல். தல். உங 'இவை? என்பது இத்தன்மைய என்னும் பொருள்பட நின்றது. நிமித்தம் என்பது உய்த்துணர்ந்து கொள்ளக் கிடந்தது. ஓதற்குப் பிரிதலாவது, தமது நாட்ட கத்து வழங்காது பிறநாட்டகத்து வழங்கும் நூல் உளவன்றே, அவற்றினைக் கற்றல் வேண்டிப் பிரிதல். பகைவயிற் பிரிதலாவது மாற்றுவேந்தபொடு போர்கருதிப் பிரி தூதிற்குப் பிரிதலாவது இருபெரு வேந்தரைச் சந்து செய்தற்பொருட்டுப் பிரி (முதல் ஏகாரம் அசைநிலை. இரண்டாம் ஏகாரம் ஈற்றசை.) (உஎ ) உஅ. அவற்றுள் ஒதலுந் தூது முயர்ந்தோர் மேன. இது மேற்கூறப்பட்டவற்றுள் ஓதற்கும் தூதுபோதற்கும் உரிய தலைமக்களை உணர்த்துதல் நுதலிற்று. இ-ள் :- அவற்றுள் - மேற் கூறப்பட்டவற்றுள், ஒதலும் தூதும்-ஓதல் காரணமாகப் பிரியும் பிரிவும் தூநாகிப் பிரியும் பிரிவும், உயர்ந்தோர்மேன - நால்யகை வருணத்தினும் உயர்ந்த அந்தணர்க்கும் அரசர்க்கும் உரிய இவர் ஒழுக்கத்தானும் குணத்தானும் செல்வத்தானும் ஏனையரினும் உயர்புடை யராதலின் 'உயர்ந்தோர்' என்றார். அரசர்தாம் தூதாகியவாறு வாசுதேவனால் உணர்க. ['மேல் என்பது ஈறு திரிந்து 'மேன' என நின்றது.) "வயலைக் கொடியின் வாடிய மருங்குல் உயவ லூர்திப் பயலைப் பார்ப்பான் எல்லி வந்து நில்லாது புக்குச் சொல்லிய சொல்லுச் சிலலே யதற்கே ஏணியுஞ் சீப்பு மாற்றி மாண்வினை யானையு மணிகளைந் தனனே ' [புறம்-ந0ரு] இதனுள் பார்ப்பார் தூதாகியவாறு கண்டுகொள்ள.