பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-அகத்திணை, புறத்திணை-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உசு தொல்காப்பியம் - இளம்பூரணம் உ. தானே சேற்லுந் தன்னொடு சிவணி ஏனோர் சேறலும் வேந்தன் மேற்றே. இது, பகையிற் பிரிதற்குரிய தலைமக்களை உணர்த்துல் நுதலிற்று. இ-ள் :- தானேசேறலும்-(பமைவர் காரணமாகி அரசன்)தானே சேறலும், தன் னோடு சிவணி ஏனோர் சேறலும் அவனொடு கூடி ஒழிந்தோர் சேறலும், வேந்தன் மேற்று-வேந்தன்கண்ணது. பகை யென்றது மேனின்ற அதிகாரத்தான் உய்த்துணர்ந்து கொள்ளக்கிடந்தது. 'தானே' என்பதன் ஏகாரம் பிரிநிலை; படையை யொழிய என் றவாறு. போரைக் குறித்துப் பிரிதலும் அரசர்க்கு உரித்தென்று கொள்க.. இதனுள் அரசன் தலைமகனா யுழிப் பகைதணிவினைப்பிரிவு எனவும், அவனொடு சிவணி ஏனோர் தலைவராயுழி வேந் தற்குற்றுழிப்பிரிவு எனவும் இதனை இருவகையாகக் கொள்க. [ஏகாரம் ஈற்றசை.] கூடு. மேவிய சிறப்பி னேனோர் படிமைப் முல்லை முதலாச் சொல்லிய முறையாற் பிழைத்தது பிழையா தாகல் வேண்டியும் இழைத்த வொண்பொருண் முடியவும் பிரிவே. இது, மேற்சொல்லப்பட்ட மூவகை நிமித்தமுமன்றி வருவன உணர்த்துதல் நுத லிற்று. இ-ன்:- [மேவிய சிறப்பின் ஏனோர் படிமைய - நால்வகை நிலத்தினும் மேவிய சிறப் பையுடைய மக்களையல்லாத தேவரது பூசையும் விழவும் முதலாயினவம், முல்லை முதலாக சொல்லிய-முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச் சொல்லிய நிலத்தின் மக்களும், முறையால் பிழைத்தது பிழையாது ஆகல் வேண்டியும் முறைமையில் தப்பிய வழி தப்பாது அறம் நிறுத்தல் காரணமாகவும், இழைத்த ஒண்பொருள் முடியவும் பிரிவு செய்யப்பட்ட ஒள்ளிய பொருள் ஆக்குதல் காரணமாகவும் பிரிவு உளதாம்.) மேவிய சிறப்பின் ஏனோர் படிமைய என்பது நால்வகை நிலத்தினும் மேவிய சிறப் பையுடைய மக்களையல்லாது தேவரது படிமையவாகிய பொருள்கள் என்றவாறு. முல்லை முதலாச் சொல்லிய என்பது முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச் சொல் லிய நிலத்தின் மக்கள் என்றவாறு. முறையால் பிழைத்தது பிழையாதாகல் வேண்டி யும் பிரிவே என்பது மேற்சொல்லப்பட்டன முறைமையில் தப்பியவழித் தப்பாது அறம் நிறுத்தற்பொருட்டும் பிரிவுளதாம் என்றவாறு. இழைத்த ஒண்பொருள் முடியவும் பிரிவே என்பது செய்யப்பட்ட பொருள் முடியவேண்டியும் பிரிவு உளதாம் என்ற வாறு. (இதன் பொழிப்பு, தேவரது பூசை முதலாயின வும் மக்களும் முறைமை தப்பிய வழி தப்பாது அறம், நிறுத்தல் காரணமாகவும், பொருளாக்குதல் காரணமாகவும் பிரிவு உளதாம் என்றவாறு.) காவல், பொருட்பிரிவு எனப் பிறநூலகத்து ஒதப்பட்ட இருவகைப்பிரிவும் ஈண்டு ஒதப்பட்டதென்று கொள்க. 'மேவிய' என்பது "மாயோன் மேய காடுறை யுலகமுஞ், சேயோன் மேய மைவரை யுலகமும்' (அசுத்-ரு] என்பதனால் நால்வகை நிலத்தினும் மேவிய எனப் பொருளாயிற்று. 'சிறப்பினேனோர்' என்றதனால் சிறப்புடையார் மக்க ளும் தெவரு மாகலின், மக்களல்லாதாரே தேவர் என்று பொருளாயிற்று. 'படிமை