பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-அகத்திணை, புறத்திணை-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருளதிகாரம் - அகத்திணையியல் பதூஉம், அவர்க்கு இயற்கையொழுக்கமாகிய ஆசாரமும், செயற்கையொழுக்கமாகிய கல்வியுமே பொருட்குக் காரணமாம் என்பதூஉம் கண்டவாறு. [ஈற்றகரம் சாரியை.] ஙசு கூஎ. முந்நீர் வழக்க மகடூஉவோ டில்லை. இதுவும், பொருள்வயிற் பிரிவதோர் இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று. இ-ள்:- முந்நீர் வழக்கம் மகடூஉவோடு இல்லை -(ஈண்டு அதிகரிக்கப்பட்ட பிரிவு காலிற்பிரிவும் கலத்திற்பிரிவும் என இருவகைப்படும்; அவற்றுள்) கலத்திற்பிரிவு தலை மகளுடன் இல்லை. எனவே, காலிற்பிரிவு தலைமகளை உடன் கொண்டு பிரியவும்பெறும் என்றவாறாம். கலத்திற் பிரிவு. தலைமகளை யொழியப் பிரிந்தமைக்குச் செய்யுள்:- "உலகுகிளர்ந் தன்ன வுருகெழு வங்கம் புலவத்திரைப் பெருங்கட னீரிடை போழ இரவு மெல்லையு மசைவின் றாகி விரைசெல வியற்கை வங்கூ ழாட்டக் கோடுயர் திணிமண லகன் றுறை நீகான் மாட வொள்ளெரி மருங்கறிந் தொய்ய ஆள்வினை புரிந்த காதலர் நாள்பல கழியா மையி னழிபட ரகல வருவர் மன்னாற் றோழி தண்பணைப் பொருபுனல் வைப்பி னம்மூ ராங்கட் கருவிளை முரணிய தண்புதற் பகன்றைப் பெருவன மலர வல்லி தீண்டிப் பலவுக்காய்ப் புறத்த பசும்பழப் பாகல் கூதழை மூதிலைக் கொடிநிறை தூங்க அறனின் றலைக்கு மானாவாடை உ எ கடிமனை மாடத்துக் கங்குல் வீசத் திருந்திழை ஞெகிழ்ந்து பெருங்கவின் சாஅய நிரைவளை யூருந் தோளென உரையொடு செல்லு மன்பினர்ப் பெறினே" [அகம் - உருச] எனவரும். காலிற் பிரிவுக்கு உதாரணம் வந்துழிக் காண்க. (கூஎ) ஙஅ. எத்திணை மருங்கினு மகடூஉ மடன்மேற் பொற்புடை நெறிமையின்மை யான. இத்துணையும் பாலைக்குரித்தாகிய பிரிவிலக்கணம் கூறினார்; இது கைக்கிளை பெருந்திணைக்கு உரிய இயல்பு உணர்த்துதல் நுதலிற்று. இ-ள்:- எ திணை மருங்கினும் - எல்லாக் குலத்தினிடத்தினும், மகடூஉ மடவ்மேல் (இல்லை)-பெண்பால் மடலேறுதல் இல்லை; பொற்புடை நெறிமை இன்மையான்- பொலிவுபெறு நெறிமை இல்லாமையான். 'மடன்மேல்' என்பது மடலேறுதல் என்னும் பொருள் குறித்தது. இல்லை என்பது மேலைச் சூத்திரத்தினின்று தந்துரைக்கப்பட்டது. 'பொற்புடை நெறிமை என்பது