பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-அகத்திணை, புறத்திணை-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியம் - இளம்பூரணம் இ-ள்:- மேலோர் முறைமை கால்வர்க்கும் உரித்து-மேலோராகிய தேவரது முறைமையை நிறுத்தற்குப் பிரியும்பிரிவு நான்குவருணத்தார்க்கும் உரித்து.(ஏகாரம் ஈற்றசை.) உசு ஙஉ. மன்னர் பாங்கிற் பின்னோ ராகு. இது, காவற்பகுதியாகிய முறைசெய்வித்தற்கு உரியமங்களை உணர்த்துதல் நுதலிற்று. இ-ள்:- மன்னர் பாங்கின் - மன்னர்க்குரிய பக்கத்திற்கு, பின்னோர் ஆகுப-(அவ் வாறு முறை செய்வதற்கு அரசன் கான் சேதல் வேண்டாமையின், அதற்குரியராய் அவனது ஏவல் வழி வரும்) வணிகரும் வேளாளரும் உரியர் ஆகும். மன்னர்க்குரிய பக்கமாவது காவல்; அஃதாவது நெறியின் முகாதாரை நெறியின் ஒழுகப் பண்ணுதல். ஙங.உயர்ந்தோர்க் குரிய வோத்தி னான். இது, வணிகர்க்கு உரியதோர் பிரிவு உணர்த்துதல் நுதலிற்று. இ-ள்:- உயர்ந்தோர்க்கு - மேல் அதிகரிக்கப்பட்ட பின்னோராகிய இருவகையோரி லும் உயர்ந்தோராகிய வணிகர்க்கு, ஒத்தினான உரிய-ஓதுதல் ரிமித்தமாகப் பிரிதலும் ஒத்துப் பலவாதலின் 'உரிய என்றார். ஈண்டு ஒத்து என்பது வேதம்; அது நால்வகை வருணத்தினும் மூவர்க்கு உரித் தென்பது இத்துணையெனக் கூறப்பட்டது. கூசு. வேந்துவினை யியற்கை வேந்த னொரீஇய ஏனோர் மருங்கினு மெய்திட னுடைத்தே. இது, வணிகர்க்கும் வேளாளர்க்கும் உரியதோர் பிரிவு உணர்த்துதல் நுதலிற்று. இ-ள்:-- வேந்து வினை இயற்கை-வேந்தனது வினை இயற்கையாகிய தூது, வேந்தன் ஓரீஇய ஏனோர் மருங்கினும்-வேந்தனை ஒழிந்த வணிகர்க்கும் வேளாளர்க்கும், எய்து இடன் உடைத்து -ஆகுமிடன் உடைந்து. வேந்தனது வினை-வேந்தற்குரிய வினை 'இடனுடைத்து' என்றதனான் அவர் தூதாங்காலம் அமைச்ச ராகியவழியே நிகழும் என்று கொள்க. (ஏகாரம் ஈற்றசை.) கூரு. பொருள்வயிற் பிரிதலு மலர்வயி னுரித்தே. இதுவும் அது. இ-ள்:- பொருள்வயின் பிரிதலும் அவர்வயின் உரித்து-பொருள்வயிற் பிரிவும் மேற்சொல்லப்பட்ட வணிகர் வேளாளரிடத்தில் உரியதாகும். (ஏகாரம் ஈச்றசை.]() ஙக. உயர்ந்தோர் பொருள்வயி னொழுக்கத் தான. இஃது, அந்தணர் பொருட்குப் பிரியந்திறன் உணர்த்துதல் நுதலிற்று. இ-ள்:- உயர்ந்தோர் பொருள்வயின் ஒழுக்கத்தான் - உயர்ந்தோராகிய அந்தணர் பொருள்வயிற் பிரியுங்காலத்து ஒழுக்கத்தானே பிரிப்.

இதனாற் சொல்லியது, வணிகர்க்கும் வேளாளர்க்கும் வாணிகம் முதலாயின் பொருணிமித்தம் ஆகியவாறுபோல, அந்தணர்க்கு இவை பொருணிமித்தம் ஆகா என்