பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-அகத்திணை, புறத்திணை-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 தொல்காப்பியம் - இளம்பூரணம் போக்கருங் கவலைய புலவுநா றருஞ்சுரந் துணிந்துபிற ளாயின ளாயினு மணிந்தணிக் தார்வ நெஞ்சமோ டாய்நல னளைஇத்தன் மார்புதுணை யாகத் துயிற்றுக தில்ல துஞ்சா முழவிற் கோவற் கோமான் நெடுந்தேர்க் காரி கொடுங்கான் முன் றுறைப் பெண்ணையம் பேர்யாற்று நுண்ணறல் கடுக்கும் நெறியிருங் கதுப்பினென் பேதைக் கறியாத்தேஎத் தாற்றிய துணையே" [அகம்-கூரு] என்பது செவிலி தெய்வம் பராஅயது. பிறவும் அன்ன. சய. ஏமப் பேரூர்ச் சேரியுஞ் சுரத்துந் தாமே செல்லுந் தாயரு முளரே. இது, தலைமகள் உடன் போகியவழிச் செவிலிக்கு உரியதோர் திறன் உணர்த்துதல் நுதலிற்று. இ-ள் :- ஏமம் பேர் ஊர் சேரியும்-ஏமம்பொருந்திய பெரிய ஊரகத்துச் சேரியின் கண்ணும், சுரத்தும் - ஊரினின்றும் நீங்கிய சுரத்தின்கண்ணும், தாமே செல்லும் தாய ரும் உளர்-தாமே செல்லுந் தாயரும் உளர். "தாமே செல்லுந் தாயர்" என்பதனால் செவிலி என்பது பெற்றாம்.'தாயரும் என்றதனால் கைத்தாயர் பலர் என்று கொள்ளப்படும். அவ்வழிச் சேரியோரை லினா தலும், சுரத்திற் கண்டோரை வினாதலும் உளவாம். சேரியிற் பிரிதலும் பாலையாகு மோ எனின், அது வருகின்ற சூத்திரத்தினால் விளங்கும். (ஈற்றேகாரம் அசை.] எனவரும். சேரியோரை வினா அயதற்குச் செய்யுள்:- "இதுவென் பாவைக் கினியகன் பாவை இதுவென் பைங்கிளி யெடுத்த பைங்கிளி இதுவென் பூவைக் கினியசொற் பூவையென் றலம்வரு நோக்கி னலம்வரு சுடர்நுதல் காண்டொறுங் காண்டொறுங் கலங்கி நீங்கின ளோவென் பூங்க ணோளே" [ஐங்குறு - கூஎரு] சரத்திடை வினாஅயதற்குச் செய்யுள்:- "எறித்தரு கதிர்தாங்கி யேந்திய குடைநீழல் உறித்தாழ்ந்த கரகமு முரைசான்ற முக்கோலும் நெறிப்படச் சுவலசைஇ வேறோார் நெஞ்சத்துக் குறிப்பேவல் செயன்மாலைக் கொளை நடை யந்தணீர் வெவ்விடைச் செலன்மாலை யொழுக்கத்தீ ரிவ்விடை என்மக ளொருத்தியும் பிறண்மக னொருவனுந் தம்முளே புணர்ந்த தாமறி புணர்ச்சியர் அன்னா ரிருவரைக் காணிரோ பெரும.[கலிபாலை-அ]