பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-அகத்திணை, புறத்திணை-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஙச் தொல்காப்பியம் - இளம்பூரணம் வரிப்புனை பத்தொடு வைஇய செல்வோள். இவைகாண் டோறு நோவர் மாதோ அளியரோ வளியரென் னாயத் தோரென நும்மொடு வரவுதா னயரவுந் தன்வரைத் தன்றியுங் கலுழ்ந்தன கண்ணே" [நற்-கஉ] எனவரும். இஃது உடன்போக்குத் தவிர்தற்பொருட்டுக் கூறியது. இன்னும் "நீக்கலின் வந்த தம்முறு விழுமம்" என்றதனால் தலைமகட்குக் கூறின வும் கொள்க. உதாரணம்:- "நாளு நாளு மாள்வினை யழுங்க இல்லிருந்து மகிழ்வோர்க் கில்லையாற் புகழென ஒண்பொருட் ககல்வர்ங் காதலர் கண்பனி துடையினித் தோழி நீயே" [சிற்றடக்கம்] எனவரும். வாய்மையும் பொய்ம்மையும் கண்டோற் சுட்டித் தாய்நிலை நோக்கித் தலைப்பெயர்த் துக்கொளினும் என்பது, மெய்ம்மையும் பொய்ம்மையும் காணப்பட்ட அவனைச் சுட்டித் தாய்நிலை நோக்கி மீட்டுக்கொள்ளுதற்கண்ணும் என்றவாறு. உதாரணம்:- "பான்மருண் மருப்பினுல்புரை பாவடி ஈர்நறுங் கமழ்கடாஅத் தினம்பிரி யொருத்தல் ஆறுகடி கொள்ளும் வேறுபுலம் படர்ந்து பொருள்வயிற் பிரிதல் வேண்டு மென்னும் அருளில் சொல்லு நீசொல் லினையே நன்னர் நறுநுதனயந்தெமை நீவி நின்னிற் பிரியலே னஞ்சலோம் பென்னும் நன்னர் மொழியு நீமொழிந் தனையே அவற்றுள், யாவேர் வாயின் மாஅன் மகனே கிழவ ரின்னோ ரென்னாது பொருடான் பழவினை மருங்கிற் பெயர்புபெயர் புறையும் அன்ன பொருள்வயிற் பிரிவோய் நின்னின் றிமைப்புவரை வாழாண் மடவோள் அமைக்கவின் கொண்ட தோளிணை மறந்தே" (கலி-பாலை-உய] எனவரும். இது தலைமகனைச் சுட்டிக் கூறியது. தாய்நிலை நோக்கித் தலைப்பெயர்த் துக்கொண்டதற்குச் செய்யுள் வந்தவழிக் கண்டுகொள்க. நோய் மிகப் பெருகித் தன் நெஞ்சு கலுழ்ந்தோளை அழிந்தது களையென மொழிந் தது கூறி வன்புறை நெருங்கி வந்ததன் திறத்தொடு என்றிவை எல்லாம் இயல்புற நாடின் ஒன்றித் தோன்றும் தோழி மேன என்பது, தலைமகன் பிரிதலால் வந்துற்ற நோய் மிகவும் பெருகித் தன் நெஞ்சு கலங்கியோளை அழிந்தது. களை தல் வேண்டுமெனத் தலைமகன் சொன்ன மாற்றத்தைக் கூறி வன்புறையின் பொருட்டு நெருங்கிவந்ததன் திறத்தோடு இத்தன்மைய வெல்லாம் இயல்புற ஆராயின் தலைமகளொடு பொருந்தித் தோன்றும் தோழிமேலன என்றவாறு.