பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-அகத்திணை, புறத்திணை-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

FL Fr தொல்காப்பியம் - இளம்பூரணம் மேடவ மன்ற தடவுநிலைக் கொன்றை கல்பிறங் கத்தஞ் சென்றோர் கூறிய பருவம் வாரா வளவை நெரிதரக் கொம்புசேர் கொடியிண ரூழ்த்த வம்ப மாரியைக் காரென மதித்தே.([குறுந்- சுசா] இது பருவம் அன்று என்றது. இன்னும் 'என்றிவை யெல்லாம்' என்றதனால், பிரியுங்காலத்துத் தலைமகட்கு உண ர்த்துகின்றேன் எனத் தலைமகற்கு உரைத்தலும், தலைமகட்கு அவர் பிரியார் எனக்கூறு தலும் கொள்க. இது விலக்கிற்று, "முளவுமா வல்சி யெயினர் தங்கை இளமா வெயிற்றிக்கு நின்னிலை யறியச் சொல்லினே னிரக்கு மளவை வென்வேற் காளை விரையா தீமே." (ஐங்குறு-ங்ஙா சாச] "விளங்கிழாஅய் செல்வாரோ வல்ல ரழற்பட் டசைந்த பிடியை யெழிற்களிறு கற்றடைச் செற்றிடைச் சின்னீரைக் கையாற்கொண் டுச்சி யொழுக்குஞ் சுரம்." இது தலைமகட்குக் கூறியது. சங பொழுது மாறு முட்குவரத் தோன்றி வழுவி னாகிய குற்றங் காட்டலும் ஊரது சார்புஞ் செல்லுந் தேயமும் ஆர்வ நெஞ்சமொடு செப்பிய வழியினும் புணர்ந்தோர் பாங்கிற் புணர்ந்த நெஞ்சமொ டழிந்தெதிர் கூறி விடுப்பினு மாங்கத் தாய்நிலை கண்டு தடுப்பினும் விடுப்பினுஞ் சேய்நிலைக் ககன்றோர் செல்வினும் வரவினுங் கண்டோர் மொழிதல் கண்ட தென்ப. இது, கண்டோர் கூற்று நிகழும் இடன் உணர்த்துதல் நுதலிற்று. இ-ள்:- பொழுதும் ஆறும் உட்குவரத் தோன்றி வழுவின் ஆகிய குற்றம் காட்ட லும் ஊரது சார்பும் செல்லும் தேயமும் ஆர்வ நெஞ்சமொடு செப்பிய வழியினும் என் பது, காலமும் நெறியும் அச்சம் வருமாறு தோன்றி வழுவுதலினாகிய குற்றம் காட்டலும் ஊரது அணிமையும் செல்லும் தேயத்தின் சேய்மையும் ஆர்வ நெஞ்சமொடு செப்பிய பக்கத்திலும் என்றவாறு. உதாரணம்:- "எம்மூ ரல்ல தூர்நணித் தில்லை வெம்முரட் செல்வன் கதிரு மூழ்த்தனன் சேந்தனை சேன்மோ பூந்தார் மார்ப இளையண் மெல்லியண் மடந்தை அரிய சேய பெருங்க லாறே" எனவரும்.