பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-அகத்திணை, புறத்திணை-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருளதிகாரம் - அகத்திணையியல் புணர்ந்தோர் பாங்கில் புணர்ந்த நெஞ்சமொடு அழிந்து எதிர் கூறி விடுப்பினும் என்பது, புணர்ந்து செல்கின்றோர் பக்கத்து விரும்பின நெஞ்சத்தொடு மனன் அழிந்து எதிர்மொழி கூறி விடுத்தற்கண்ணும் கூற்று நிகழும் என்றவாறு. உதாரணம்:- "அழுந்துபட வீழ்ந்த பெருந்தண் குன்றத் தொலிவலீந்தி னுலவை யங்காட் டாறு சென்மாக்கள் சென்னி யெறிந்த செம்மறுத் தலைய நெய்த்தோர் வாய் வல்லியம் பெருந்தலைக் குருளை மாலை மரனோக்கு மிண்டிவ ரீங்கைய வையெயிற் றையண் மடந்தை முன்னுற் றெல்லிடை நீங்கு மிளையோ னுள்ளங் காலொடு பட்ட மாரி மால்வரை மிளிர்க்கு முருமினுங் கொடிதே (நற்-உ] எனவரும். ஆங்கு அத்தாய்நிலை கண்டு தடுப்பினும் விடுப்பினும் என்பது, ஆண்டுப் பின்சென்ற அச்செவிலித்தாயது நிலைமையைக்கண்டு போகாமல் தடுத்தற்கண்ணும் போகவிடுத்தற் கண்ணும் என் றவாறு. உதாரணம்:- "அறம்புரி யருமறை நவின்ற நாவிற் றிறம்புரி கொள்கை யந்தணிர் தொழுவலென் றொண்டொடி வினவும் பேதையம் பெண்டே கண்டனெ மம்ம சுரத்திடை யவளே இன்றுணை யினிதுபாராட்டக் குன்றுயர் பிறங்கன் மலையிறந் தோளே" [ஐங்குறு-கூஅஎ] எனவரும். இது செவிலி வினாஅயவழிக் கூறியது. "பெயர்ந்து போகுதி பெருமூ தாட்டி சிலம்புகெழு சீறடி சிவப்ப இலங்குவேற் காளையோ டிறந்தனள் சுரனே." இது தடுத்தற்கண் வந்தது. "லெருப்பவிர் கனலி யுருப்புச்சினந் தணியக் கருங்கால் யாத்து வரிகிழ லிரீஇச் சிறுவரை யிறப்பிற் காண்குளை செறிதொடிப் பொன்னேர் மேனி மடந்தையொடு வென்மேல் விடலை முன்னிய சுரனே."[ஐங்குறு - ஙஅஅ]

ங எ இது விடுத்தற்கண் வந்தது. சேய்நிலைக்கு அகன்றோர் செல்வினும் வரவினும் என்பது, சேய்மைக்கண் அகன் றோர் செல்லுதற்கண்ணும் வரவின் கண்ணும் என்றலாறு. உதாரணம்: வில்லோன் காவன கழலே தொடியோண் மெல்லடி மேலவுஞ் சிலம்பே நல்லோர்