பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-அகத்திணை, புறத்திணை-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஙஅ தொல்காப்பியம் - இளம்பூரணம் யார்கொ வளியர் தாமே யாரியர் கயிறாடு பறையிற் கால்பொரக் கலங்கி வாகை வெண்ணெற் றொலிக்கும் வேய்பயி லழுவ முன்னி யோரே" [குறுங்-ஏ) எனவரும். கண்டோர் மொழிதல் கண்டது என்ப என்பது, இவ்விவ்விடங்களில் கண்டோர் சொல்லுதல் வழக்கிற் காணப்பட்ட தென்ப என்றவாறு. (set) ஒன்றாத் தமரினும் பருவத்துஞ் சுரத்தும் ஒன்றிய மொழியொடு வலிப்பினும் விடுப்பினும் இடைச்சுர மருங்கி னவடம ரெய்திக் கடைக்கொண்டு பெயர்தலிற் கலங்கஞ் ரெய்திக் கற்பொடு புணர்ந்த கௌவை யுளப்பட அப்பாற் பட்ட வொருதிறத் தானும் நாளது சின்மையு மிளமைய தருமையுந் தாளாண் பக்கமுந் தகுதிய தமைதியும் இன்மைய திளிவு முடைமைய துயர்ச்சியும் அன்பின தகலமு மகற்சிய தருமையும் ஒன்றாப் பொருள்வயி னூக்கிய பாலினும் லாயினுங் கையினும் வகுத்த பக்கமோ டூதியங் கருதிய வொருதிறத் தானும் புகழு மானமு மெடுத்துவற் புறுத்தலுந் தூதிடை யிட்ட வகையி னானும் ஆகித் தோன்றும் பாங்கோர் பாங்கினும் மூன்றன் பகுதியு மண்டிலத் தருமையுந் தோன்றல் சான்ற மாற்றோர் மேன்மையும் பாசறைப் புலம்பலு முடிந்த காலத்துப் பாகனொடு விரும்பிய வினைத்திற வகையிலும் காவற் பாங்கி னாங்கோர் பக்கமும் பரத்தையி னகற்சியிற் பிரிந்தோட் குறுகி இரத்தலுந் தெளித்தலு மெனவிரு வகையோ டுரைத்திற நாட்டங் கிழவோன் மேன. இது பிரிவின்கண் தலைமகற்குக் கூற்று நிகழும் இடன் உணர்த்துதல் நுதலிற்று. இ-ள்:- ஒன்றாத் தமரினும் பருவத்தும் சுரத்தும் ஒன்றிய மொழியொடு வலிப் பினும் விடுப்பினும் என்பது, வரைவு உடன்படாத தமர்கண்ணும் பருவத்தின் கண் சுரத்தின் கண்ணும் பொருந்திய சொல்லொடு தலைமகளை உடன் கொண்டு போகத்துணியினும் விடுத்துப்போகினும் கிழவோர்க்குக் கூற்று நிகழும் என் றவாறு. ணும் 'உரைத்திற நாட்டம் உளவாம் கிழவோற்கு' என்பதை எனைய பகுதிக்கும் ஓட்டுக.