பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-அகத்திணை, புறத்திணை-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வலித்தற்குச் செய்யுள்:- எனவும், எனவும் வரும். பொருளதிகாரம் - அகத்திணையியல் "ஆறுசெல் வருத்தஞ் சீறடி சிவப்பவுஞ் சினைநீங்கு தளிரின் வண்ணம் வாடவுந் தான்வா றுணிந்த விவளினு மிவளுடன் வேய்பயி லழுவ முவக்கும் பேதை நெஞ்சம் பெருந்தக வுடைத்தே எனவரும். "வேட்டச் செந்நாய் கிளைத்தூண் மிச்சில் குளவி மொய்த்த வழுகற் சின்னீர் வளையுடைக் கைய ளெம்மோ டுணீஇய வருகதில் லம்ம தானே அளியளோ வளியளென் னெஞ்சமாந் தோளே"(குறுந் - ருசு] அவ்வழி இடைச்சுரத்திற் கூறியதற்குச் செய்யுள் : = 66 அழிவில் முயலு மார்வ மாக்கள் வழிபடு தெய்வங் கட்கண் டா அங் கலமரல் வருத்தந் தீர யாழமின் நலமென் பணைத்தோ ளெய்தின மாகலிற் பொரிப்பூம் புன்கி னெழிற்றகை யொண்முறி சுணங்கணி வனமுலை யணங்குகொளத் திமிரி நிழல்காண் டோறு நெடிய வைகி மணல்காண் டோறும் வண்ட றைஇ வருந்தா தேகுமதி வாலெயிற் றோயே மாநனை கொழுதி மகிழ்குயி லாலு நறுந்தண் பொழில கானங் குறும்ப லூர யாஞ்செல்லு மாறே [நற் -கூ] விடுத்தற்குச் செய்யுள் :- இரும்புலிக் கிரிந்த கருங்கட் செந்நாஞ் நாட்டயிர் கடைகுரல் கேட்டொறும் வெரூஉம் ஆநிலைப் புள்ளி யல்க நம்மொடு மானுண் கண்ணியும் வருமெனின் வாரா ராயரோ பெருங்க லாறே' எனவரும். இஃது உடன் கொண்டு பெயர்தல் வேண்டுமென்ற தோழிக்குக் காட் டது கடுமை கூறி விடுத்தது. "கிளிபுரை கிள்வியா யெம்மொடு கீவரிற் றளிபொழி தளிரன்ன வெழின் மேனி கவின் வாட போழ்ந்த முளியரில் பொத்திய முழங்கழ லிடை வளியுறி னவ்வெழில் வாடுவை யல்லவோ" [தலி-பாலை-கூ] என்பது தலைவிக்குக் காட்டது கடுமை கூறி விடுத்தது.