பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-அகத்திணை, புறத்திணை-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுரு தொல்காப்பியம் - இளம்பூரணம் இடைச்சுரம் மருங்கின் அவள் தமர் எய்திக் கடைக்கொண்டு பெயர்தலில் கலங்கு அஞர் எய்திக் கற்பொடு புணர்ந்த கௌவை உளப்பட அப்பால் பட்ட ஒரு திறத்தானும் என்பது, தலைமகள் செல்கின்ற இடைச்சுரத்திடைத் தலைமகள் தமர் எய்தி மீட்டுக் கொண்டு பெயர்தல் மரபாதலின் அங்ஙனம் பெயர்வர் எனக் கலங்கி வருத்தமுற்றுக் கற்பொடு புணர்ந்த அலர் உளப்பட அப்பகுதிப்பட்ட உடன் போக்கின் கண்ணும் அவற்குக் கூற்று நிகழும் என்றவாறு. அவ்வழி, வருவரெனக்கூறலும் வந்தவழிக்கூறலும் உளவாம். உதாரணம்:- "வினையமை பாவையி னியலி நுந்தை மனைவரை யிறந்து வந்தனை யாயிற் றலைநாட் கெதிரிய தண்பெய லெழிலி யணிமிகு கானத் தகன்புறம் பரந்த கடுஞ்செம் மூதாய் கண்டுங் கொண்டும் நீவிளை யாடுக சிறிதே யானே மழகளி றுரிஞ்சிய பறாஅரை வேங்கை மணலிடு மருங்கி னிரும்புறம் பொருந்தி அமர்வரினஞ்சேன் பெயர்க்குவன் நுமர்வரின் மறைகுவென் மாஅ யோளே." (நற்கூசுஉ] இது வருவர் என ஐயுற்றுக்கூறியது. 'கற்பொடு புணர்ந்த கௌவை'க்குச் செய்யுள் வந்தவழிக் கண்டுகொள்க. நானது சின்மையும் இளமையது அருமையும் தாளாண் பக்கமும் தகுதியது அமை தியும் இன்மையது இளிவும் உடைமையது உயர்ச்சியும் அன்பினது அகலமும் அகற் சியது அருமையும் ஒன்றாப் பொருள்வயின் ஊக்கிய பாவினும் என்பது, நானது சின்மை முதலாகச் சொல்லப்பட்ட எட்டனையும் பொருந்தாத பொருட்கண் ஊக்கிய பக்கத்தி னும் அவற்குக் கூற்று நிகழும் என்றவாறு. ஒன்றா' என்னும் பெயரெச்சம் 'பால்' என்னும் பெயர் கொண்டு முடிந்தது. அது 'பொருள்வயி னூக்கிய பால்' என அடையடுத்து நின்றது.

நாளது சின்மையை ஒன்றாமையாவது, யாக்கை நிலையாது என உணரும் உணர்ச் சியைப் பொருந்தாமை, இளமையது அருமையை ஒன்றாமையாவது, பெறுதற்கரிய இளமை நிலையாது என உணரும் உணர்ச்சியைப் பொருந்தாமை. தாளாண் பக்கத்தை ஒன்றாமையாவது, முயற்சியான் வரும் வருத்தத்தை உண ரும் உணர்ச்சியைப் பொருந்தாமை. தகுதியது அமைதியை ஒன்றாமையாவது, பொருண்மேற் காதல் உணர்ந்தோர்க் குத் தகாது என உணரும் உணர்ச்சியைப் பொருந்தாமை. இன்மையது இளிவை ஒன்றாமையாது, இன்மையான் வரும் இளிவரலினைப் பொருந்தாமை. உடைமையது உயர்ச்சியை ஒன் றாமையாவது, பொருள் உடையார்க்கு அமைவு வேண்டுமன்றே, அவ்வமைவினைப் பொருந்தாமை: அஃதாவது மென்மீேலும் ஆசை செலுத்துதல்.