பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-அகத்திணை, புறத்திணை-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருளதிகாரம் - அகத்திணையியல் மென்சிறை வண்டின் றண்கமழ் பூந்துணர்த் தாதின்றுவலை தளிர்வார்ந் தன்ன அங்கலுழ் மாமைக் கிளைஇய நுண்பஃ றித்தி மாஅ யோளே " [அகம் -முக} என்பது பகையிற் பிரியும் தலைமகன் கூற்று. பிறவும் அன்ன. இவ்வாறு வருவன் குறித்த பருவம் பிழைத்துழி என்று கொள்ள. முடிந்த காலத்துப் பாகனொடு விரும்பிய வினைத்திற வசையினும் என்பது, வினை முடிந்து காலத்துப் பாகனொடு விரும்பப்பட்ட வினைத்திறத்தினது வகையின் கண்ணும் அவற்குக் கூற்று நீகழும் என்றவாறு. அது பாசறைக்கட் கூறலும், மீண்டு இடைச்சுரத்துக் கூறலும் என் இரு வகைப்படும், இன்னும், 'வகை' என்றதனான் நெஞ்சிற்குக் கூறியனவுங்கொள்க. உதாரணம்:- எனவும், "வந்துவினை முடித்த வேந்தனும் பகைவரும் தந்திறை கொடுத்துத் தமரா யினரே முரண்செறிந் திருந்த சேனை யிரண்டும் ஒன்றென வறைந்தன பணையே நின்றேர் றாங் முன்னியங் கூதிர்ப் பின்னிலை யீயா தூர்க பாக வொருவினை கழிய மன்ன னேற்றை நறும்பூ ணத்தி துன்னருங் கடுந்திறற் கங்கன் கட்டி பொன்னணி வல்லிற் புன்றுறை யென் நன்றவர் குழீஇய வளப்பருங் கட்டூர்ப் பருந்துபடப் பண்ணிப் பழையன் பட்டெனக் கண்டது நோனா னாகித் திண்டேர்க் கணைய கைப்படக் கழுமலந் தந்த பிணையலங் கண்ணிப் பெரும்பூட் சென்னி அழும்பி என்ன வறாஅ யாணர்ப் பழம்பன் னெல்லின் பல்குடிப் பரவைப் பொங்கடி கடிகய மண்டிய கடிமிளைத் தண்குட வாயி லன்னோள் பண்புடை யாகத் தின்றுயில் பெறவே" (அகம்--ச) "கேள்கே நீன் றவுங் கிளைஞராரவுங் கேனல் கேளீர் கெழிஇயின ரொழுகவும் ஆள்வினைக் கெதிரிய ஆக்கமொடு புகல்சிறந் தாரங் கண்ணி யருபோர்ச் சோழர் அறங்கெழு நல்ல்வை யுறந்தை யன்ன பெறலரு நன்கல மெய்தி நாடுஞ் செயலருஞ் செய்வினை முற்றின மாயின் அரண்பல கடந்த முரண்கொ டானை வாடா வேம்பின் வழுதி கூடல் நாளங் காடி யாறு நறுநுதல்