பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-அகத்திணை, புறத்திணை-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியம் - இளம்பூரணம் நீளிருங் கூந்தன் மாஅ ' யோளொடு வரை குயின் றன்ன லான்றோய் நெடுநகர் நுரைமுகந் தன்ன மென்பூஞ் சேக்கை நிவந்த பள்ளி நெடுஞ்சுடர் விளக்கத்து நலங்கே ழாகம் பூண்வடுப் பொறிப்ப முயங்குகஞ் சென்மோ நெஞ்சே வரிநுதல் வயந்திகழ் பிழி தரும் வாய்புகு கடாஅத்து மீளி முன்பொடு நிலனெறியாக் குறுகி ஆட்கோட் பிழையா வஞ்சுவரு தடக்கைக் கடும்பகட் டியானை நெடுந்தேர்க் கோதை திருவமர் வியனகர்க் கருவூர் முன்றுறைத் தெண்ணீ ருயர்கரைக் குலைஇய தண்ணான் பொருநை மணலினும் பலவே" [அகம் - கூங எனவும் வருவன நெஞ்சிற்குக் கூறியன. "கொல்வினைப் பொலிந்த கூர்ங்குறும் பெஃகின் வில்லோர் தூணி வீங்கப் பெய்த அப்புநுனை யேய்ப்ப வரும்பிய லிருப்பைச் செப்பட ரன்ன செங்குழை யகந்தோ றிழுதினன்ன தீம்புழற் றுய்வாய் உழுதுகாண் டுளைய வாகி யார்கழல் பாலி வானிற் காலொடு பாறித் துப்பி னன்ன செங்கோட்டியவின் நெய்த்தோர் மீமிசை நிணத்திற் பரிக்கும் அத்த நண்ணிய வங்குடிச் சீறூர்க் கொடுநுண் ணோதி மகளி ரோச்சிய தொடிமா ணுலக்கைத் தூண்டுஏற் பாணி நெடுமால் வரைய குடிஞையோ டிாட்டுங் குன்றுபின் னொழியப் போகி யுரந்துரந்து ஞாயிறு படினு மூர்சேய்த் தெனாது துனைபரி துரக்குந் துஞ்சாச் செலவின் எம்மினும் விரைந்துவல் லெய்திப் பன் மாண் ஓங்குயர் நல்லி லொருசிறை நிலைஇப் பாங்கர்ப் பல்லி படுதொறும் பரவிக் கன்றுபுகு மாலை நின்றோ ளெய்திக் கைகவியாச் சென்று கண்புதையாக் குறுகிப் பிடிக்கை யன்ன பின்னகந் தீண்டித் தொடிக்கை தைவரத் தோய்ந்தன்று கொல்லோ நாணொடு மிடைந்த கற்பின் வாணுதல் அந்தீங் கிளவிக் குறுமகண் மென்றோள் பெறநசை இச் சென்றவெ இஃது இடைச்சுறத்துச் சொல்லியது. னெஞ்சே." [அகம்-கூ)