பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-அகத்திணை, புறத்திணை-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருளதிகாரம் - அகத்திணையியல் காவல் பாங்கின் ஆங்கு ஓர் பக்கமும் என்பது, காவற்பக்கத்தின் கண் ஒரு பிரிவி னும் கூற்று நிகழும் என்றவாறு. 'ஆங்கு' என்பது இடங்குறித்து நின்றது; "நின்னாங்கு வரூஉமென்னெஞ்சினை" (கலி- பாலை -உஉ] என்றாற் போலக் கொள்ள. இது வாரியுள் யானை காணவும், நாடுகாண் வும், புனலாடவும், கடவுளரை வழிபடவும் பிரியும் பிரிவு. ஒருபக்கம் நாட்டெல்லையி லிருந்து பகைவரைக் காக்கவேண்டிப் பிரிவது பகையிெற் பிரிவின் அடங்குதலின், அஃதன் உண்மைக்கண் பிரியும் பிரிவு என்று ஓதப்பட்டது. பரத்தையின் அகற்சியின் என்பது, பரத்தையரிற் பிரியும் பிரிவின் கண்ணும் என்றவாறு. உம்மை எஞ்சி நின்றது. பிரிந்தோட் குறுகி இரத்தலும் தெளித்தலும் என இருவகையோடு என்பது, பிரியப்பட்ட தலைமகளைக் குறுகி இரத்தலும் தெளித்தலும் ஆகிய இரண்டு வகையோ டே கூட என்றவாறு. காவற்பாங்கின் ஆங்கோர் பக்கத்தினும் பரத்தையின் அகற்சியினும் பிரியப்பட் டார் எனக் கூட்டுக. அஃதேல் பரத்தையின் அகற்சி ஊடலாகாதோ வெனின், ஊட லின் மிக்க நிலையே ஈண்டுக் கூறுகின்றதெனக் கொள்க. கடவுள்மாட்டுப் பிரிந்துவந்த தலைமகனைத் தலைமகள் புணர்ச்சி மறுத்தற்குச் செய்யுள்: மருதக்கலியுள் கடவுட் பாட்டினுள் [கலி-மரு-உஅ], எனவும், "வண்டுது சாந்தம் வடுக்கொஞ் நீஷிய தண்டாத்தீஞ் சாயற் பரத்தை வியன்மார்ப பண்டின்னை யல்லைமன் னீங்கெல்லி வந்தீயக் கண்ட தெவன்மற் றுரை; நன்றும், தடைஇய மென்றோளாய் கேட்டீவா யாயின் உடனுறை வாழ்க்கைக் குதவி யுறையுங் கடவுளர் கட்டங்கி னேன்: சோலை, மலர்வேய்ந்த மான்பிணை யன்னார் பலர்நீ கடவுண்மை கொண்டொழுகு வார்" "சிறுவரைத் தங்கின் வெகுள்வர் செறுத்தக்காய் தேறினென் சென்றீநீ சொல்லாய் விடுவாயேல் நற்றா ரகலத்துக் கொருசார் மேவிய நெட்டிருங் கூந்தற் கடவுள ரெல்லார்க்கு முட்டுப்பா டாகலு முண்டு" எனவும் புணர்ச்சிக்கு உடன்படாது கூறுதலானும், குறும்பூழ்ப் பாட்டினுள் [கவி-மரு-கூய], "விடலைநீ நீத்தலி னோய்பெரி தேய்க்கும் நடலைப்பட் டெல்லாநின் பூழ்." என்றவழி மருதநிலத்தின் தலைமகளை விடலை என்றமையானும், இதனுள்