பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-அகத்திணை, புறத்திணை-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ருகூ தொல்காப்பியம் - இளம்பூரணம் ளாகித் தலைமகன் இளையனாதலும், இவ்விருவரும் இளமைப்பருவம் நீங்கியவழி அறத்தின் மேல் மனம் நிகழ்தலன்றிக் காமத்தின் மேல் மனம் நிகழ்தலும் என. உதாரணம்:-- உளைத்தவர் கூறு முறை யெல்லா நிற்க முளைத்த முறுவலார்க் கெல்லாம் -விளைத்த பழங்க ளனைத்தாய்ப் படுகளி செய்யு முழங்கு புன தூரன் மூப்பு."[வெண்-இருபாற்பொருந்திணை -கச] இதனுள் தலைமகன் இளமை தீர் திறம் வந்தவாறு காண்க. 46 அரும்பிற்கு முண்டோ வலது நாற்றம் பெருந்தோள் விறலி பினை கல் - சுரும்போ டதிரும் புனலாற் காரமிழ்த மன்றோ முதிரு முலையார் முயக்கு."[வெண்-இருபாற்பொருந்திணை -கக] இதனுள் தலைமகள் இளமை தீர் திறம் வந்தவாறு காண்க. << எனவும், ஆண்டலைக் கீன்ற பறழ்மகனே நீயெம்மை வேண்டுவ லென்று விலக்கினை நின்போல்வார் தீண்டப் பெறுபவோ மற்று"(கலி-மருதம்-உகூ உக்கத்து மேலு நடுவுயர்ந்து வாள்வாய் கொக்குரித் தன்ன கொடுமடாய் நின்னையான் புக்ககலம் புல்லினெஞ் சூன்றும் புறம்பஸ்லின் அக்குளுத்துப் புல்லலு மாற்றே னருளீமோ பக்கத்துப் புல்லல் சிறிது" [கலி-மருதம்- உசு) எனவும் முறையே தலைமகன் தலைமகள் ஆவார் இருவர் இளமை தீர் திறம் வந்த வாறு காண்க. தேறுதல் ஒழிந்த காமத்து மிகு திறமாவது, தெளிவு ஒழிந்த காமத்தின்கண்ணே மிகுதலும் என்றவாறு. இது பெரும்பான்மை தலைமகட்கே உரித்து. உதாரணம்:-- "புரிவுண்ட புணர்ச்சியுட் புல்லாரா மாத்திரை அருகுவித் தொருவரை பகற்றலிற் றெரிவார்கட் செயகின்ற பண்ணினுட் செவிசுவை கொள்ளாமை கயனின்ற பொருள்கெடப் புரியறு நரம்பினும் பயனின்று மன் றம்ம காம மிவண்மன்னும் ஒண்ணுத் லாயத்தா ரோராங்குத் திளைப்பினும் முண்ணுனை தோன்றாமை முறுவல்கொண் டடக்கித்தன் கண்ணினு முகத்தினு நகுபவள் பெண்ணின்றி யாவருந் தன்குரல் கேட்ப நிரை வெண்பன் மீயுயர் தோன்ற நகாஅ நக்காங்கே பூவுயிர்த் தன்ன புகழ்சா லெழிலுண்கண் ஆயிதழ் மல்க வழும்;