பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-அகத்திணை, புறத்திணை-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருளதிகாரம் - அகத்திணையியல் இ-ள் :-- ஏறிய மடல் திறம்-ஏறிய மடற்றிறமும், இளமை தீர்திறம் - இளமை தீர்தி றமும், தேறுதல் ஒழிந்த காமத்து மிகுதிறம் தேறுதலொழிந்த காமத்து மிகுதிறமும், மிக்க காமத்து மிடலொடு தொகைஇ-மிக்க காமத்து மாறாய திறனொடு கூட்டி, செப் பிய நான்கும் பெருந்தினைக் குறிப்பு - சொல்லப்பட்ட நான்கு திறமும் பெருந்திணைக் கருத்து. கைக்கிளை புணராது நிகழும் என்றமையால், இது புணர்ந்தபின் நிகழும் என்று கொள்க, ஏறிய மடற்றிறம் தலைமகற்கே உரித்து. அது வருமாறு:- எழின்மருப் பெழில்வேழ மிகுதரு கடாத்தான் தொழின்மாறித் தலைவைத்த தோட்டிகை நிமிர்ந்தாங் கறிவுகம் மறிவாய்ந்த வடக்கமு நாணொடு வறிதாகப்பிறரென்னை நகுபவு நகுபுடன் மின்னவிர் நுடக்கமுங் கனவும்போன் மெய்காட்டி என்னெஞ்ச மென்னொடு நில்லாமை நனிவௌவித் தன்னலங் கரந்தாளைத் தலைப்படுமா றெவன் கொலோ மணிப்பீலி சூட்டிய நூலொடு மற்றை அணிப்பூளை யாவிரை யெருக்கொடு பிணித்தியாத்து மல்லலூர் மறுகின் க ணிவட்பாடு மிவனொருத்தன் எல்லீருங் கேட்டீமீ னென்று; படரும் பனையீன்ற மாவுஞ் சுடரிழை நல்கியா ணல்கி யவை பொறையென் வரைத்தன்றிப் பூநுதலீத்த நிறையழி காமநோய் நீந்தி யறையுற்ற உப்பியல் பாவை யுறையுற் றதுபோல உக்கு விடுமென் னுயிர்; பூளை பொலமல ராவிரை வேய்வென்ற தோனா ளெமக்கீத்த பூ; உரித்தென் வரைத்தன்றி யொள்ளிழை தந்த பரிசழி பைதனோய் மூழ்கி யெரிபரந்த நெய்யுண் மெழுகி னிலையாது பைபயத் தேயு மளித்தென் னுயிர் ; இளையாரு மேதி லவரு முளையயான் உற்ற துசாவுந் துணை; என்றியான் பாடக் கேட்டு வன்புறு கிளவியர் வருளிவந் தளித்தலிற் துன்பத்திற் றுணையாய் மடலினி யிவட்பெற இன்பத்து ளிடம்படலென் றிரங்கின என்புற் றடங்கருந் தோற்றத் தருந்தவ முயன்றோர்தாம் உடம்பொழித் துயருல கினிறுபெற் றாங்கே." [கலி - நெய்- உசு] இளமை தீர் திறமாவது, இளமை நீங்கிய திறத்தின்கண் நிகழ்வது. மூவகைப்படும்; தலைமகன் முதியனாகித் தலைமகள் இளையளாதலும், தலைமகள் முதிய