பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-அகத்திணை, புறத்திணை-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியம் - இளம்பூரணம் காமம் சாலா இளமையோன்வயிற் கூறியதற்குச் செய்யுள் :- "ஊர்க்கா னிவந்த பொதும்பரு ணீர்க்காற் கொழுகிழன் ஞாழன் முதிரிணர் கொண்டு கழும முடித்துக் கண்கூடு கூழை சுவன்மிசைத் தாதொடு தாழ சென்மதி தீங்கதிர் விட்டது போல முகனமர்ந் சீங்கே வருவா ளிவன்யார்கொ லாங்கேயோர் வல்லவன் றைஇய பாலைகொ னல்லார் உறுப்பெலாங் கொண்டியற்றி யாள்கொல் வெறுப்பினால் வேண்டுருலங் கொண்டதோர் கூற்றங்கொ லாண்டார் கடிதிவளைக் காவார் விடுதல் சொடியியற் பல்கலைச் சில்பூங் கலிங்கத்த ளிங்கீதோர் கல்கூர்ந்தார் செல்வ மகள்; இவளைச், சொல்லாடிக் காண்பென் றகைத்து; நல்லாய்கேள், ஆய்தூவியனமென வணிமயிற் பெடையெனத் தூதுணம் புறவெனத் துதைந்தநின் னெழிலைம் மாதர்சொண் மானோக்கின் மடநல்லாய் விற்கண்டார்ப் பேதுறூஉ மென்பதை யறிதியோ வறியாயோ? நணங்கமைத் திரளென நுண்ணிழை யணையென முழங்குநீர்ப் புணையென வமைந்தநின் றடமென்றோள் வணங்கிறை வாலெயிற் றந்நல்லாய் நிற்கண்டார்க் கணங்காகு மென்பதை யறிதியோ வறியாயோ? முதிர்கோங்கின் முகையென முகஞ்செய்த குரும்பையெனப் பெயறுளி முகிழெனப் பெருந்தநின் னிளமுலை மயிர்வார்ந்த எரிமுன் கை மடநல்லாய் நிற்கண்டார் உயிர்வாங்கு மென்பதை யுணர்தியோ வுணராயோ? எனவாங்கு, பேதுற்றாய் போலப் பிற்ரெவ்வ நீயறியாய் யாதொன்றும் வாளா திறந்தீவாய் கேளினி நீயுந் தவறிலை நின்னைப் புறங்கடைப் போதா விட்ட நுமருந் தவறிலர் நிறையழி கொல்யானை நீர்க்குவிட் டாங்குப் பறையறைந் தல்லது செல்லற்க வென்னா இறையே தவறுடை யான்." (கலி-குறிஞ்-உய] ஏறிய மடற்றிற மிளமை தீர் திறந் தேறுத லொழிந்த காமத்து மிகுதிறம் மிக்க காமத்து மிடலொடு தொகைஇச் செப்பிய நான்கும் பெருந்திணைக் குறிப்பே. இது, பெருந்திணை ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.