பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-அகத்திணை, புறத்திணை-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருளதிகாரம் - அகத்திணையியல் ருஉ. ஏனை யுவமந் தானுணர் வகைத்தே. இஃது, ஏனை உவமம் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று. இ-ள் :- ஏனை உவமம் தான் உணர் வகைத்து - உள்ளுறை யொழிந்த உவமம் தான் உணரும் வகையாள் வரும். G5 தான் உணரும் வகையானது, வண்ணத்தானாதல் வடிவானாதல் பயனானாதல் தொழி லானாதல் உவமிக்கப்படும் பொருளொடு எடுத்துக்கூறுதல். (ஏகாரம் ஈற்றசை.) அது வருமாறு உவமவியலுட் கூறப்படும். இதனால் தினை உணருமாறு:- "வளமலர் ததைந்த வண்டுபடு நறும்பொழின் முளைநிரை முறுவ லொருத்தியொடு நெருநற் குறிநீ செய்தனை யென்ப வலரே குரல நீள்சினை யுறையும் பருவ மாக்குயிற் கௌலையிற் பெரிதே." (ஐங்குறு - ஙகூகூ] இஃது ஊடற் பொருண்மைத்தேனும், வேனிற்காலத்து நிகழும் குயிற்குரலை உணமித்தலிற் பாலைத்திணையாயிற்று. குரவம்-குராமரம். 'உரைத்திசிற் றோழியது புரைத்தோ வன்றே துருக்கங் கமழு மென்றோள் துறப்ப வென்றி யிறீஇயரென் னுயிரே." [சிற்றடக்கம்] இது துருக்கம் என உவமை கூறுதலாற் குறிஞ்சியாயிற்று. ருங.. காமஞ் சாலா விளமை யோள்வயின் ஏமஞ் சாலா விடும்பை பெய்தி நன்மையுந் தீமையு மென்றிரு திறத்தாற் றன்னொடு மவளொடுத் தருக்கிய புணர்த்துச் சொல்லெதிர் பெறாஅன் சொல்லி யின்புறல் புல்லித் தோன்றுங் கைக்கிளைக் குறிப்பே. மேல் நடுவணைந்திணைக்குரிய பொருண்மையெல்லாம் கூறினார். இது கைக்கிளை யாமாறு உணர்த்துதல் நுதலிற்று. இ-ள்:- காமம் சாலா இளமையோள்வயின் - காமம் அமையாத இளையாள்மாட்டு, துமம் சாலா இடும்பை எய்தி-எமம் அமையாத இடும்பை எய்தி, நன்மையும் தீமையும் என்று இரு திறத்தான் - புகழ்கலும் பழித்தலுமாகிய இரு திறத்தால், தன்னொடும் அவ ளொடும் தருக்கிய புணர்த்து-தனக்கும் அவட்கும் ஒத்தன புணர்த்து, சொல் எதிர் பெறான் சொல்லி இன்புறல் - சொல் எதிர் பெறானாய்த் தானே சொல்லி இன்புறுதல், புல்லித் தோன்றும் கைக்கிளைக் குறிப்பு பொருந்தித் தோன்றும் கைக்கிளைக்குறிப்பு, 'பொருந்தித்தோன்றும்' என்றதனால் அகத்தொடு பொருந்துதல் கொள்க. என்னை? 'காமஞ்சாலா என்றதனால் தலைமைக்குக் குற்றம் வாராதாயிற்று, 'புல்லித் தோன்றும்' என்றதனால், புல்லாமற்றோன்றும் கைக்கிளையும் கொள்ளப்படும். அஃதா வது, காமஞ்சான்ற தலைமகள்மாட்டு நிகழும் மனநிகழ்ச்சி. அது களவியலுள் கூறப்படு கின்றது. [' என்று என்பது எண்ணிடைச்சொல். ஏகாரம் ஈற்றசை.]