பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-அகத்திணை, புறத்திணை-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியம் - இளம்பூரணம் "நெடுங்கழை முளிய வேனி னீடிக் கடுங்கதிர் ஞாயிறு கல்பகத் தெறுதலின் வெய்ய வாயின முன்னே யினியே ஒண்ணுத லரிவையை யுள்ளுதொறுந் தண்ணிய வாயின சுரத்திடை யாறே." [ஐங்குறு-கூஉஉ] இஃது இடைச்சுரத்துக் கூறியது. சக. உள்ளுறை யுவம் மேனை யுவமமெனத் தள்ளா தாகுந் திணையுணர் வகையே. இஃது, உவமவகையான் ஐந்திணைக்கும் உரியதோர் இயல்பு உணர்த்துதல் நுத லிற்று. இ - ள் :-- உள்ளுறை உவமம் ஏனை உவமம் என - உள்ளுறைக்கண் வரும் உவம மும் ஒழிந்த உவமும் என இருவகையாலும், திணை உணர்வகை தள்ளாது ஆகும் - திணை உணரும் வகை தப்பாதாகும். (ஏகாரம் ஈற்றசை.) உதாரணம் முன்னர்க் காட்டும். ருய, உள்ளுறை தெய்வ மொழிந்ததை நிலமெனக் கொள்ளு மென்ப குறியறிந் தோரே. இஃது, உள்ளுறையாமாறு உணர்த்துதல் நுதலிற்று. இ-ள் :- உள்ளுறை தெய்வம் ஒழிந்ததை - உள்ளுறையாவது கருப்பொருட்டெய் வம் ஒழிந்த பொருளை,நிலம் என கொள்ளும் என்ப குறி அறிந்தோர்- இடமாகக்கொ ண்டு வரும் என்று சொல்லுவர் இலக்கணம் அறிந்தோர். குறி-இலக்கணம். (ருய) ருக. உள்ளுறுத் திதனோ டொத்துப்பொருண் முடிகௌ உள்ளுறுத் துரைப்பதே யுள்ளுறை யுவமம். இஃது, உள்ளுறை உவமம் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று. இ-ள் :- உள்ளுறுத்து பொருள் இதனோடு ஒத்து முடிக என -(உள்ளுறுத்தப்பட்ட கருப்பொருளை) உள்ளுறுத்துக் கருதிய பொருள் இதனொடு ஒத்து முடிக என, உள்ளு றுத்து உரைப்பதே உள்ளுறை உவமம்-உள்ளுறுத்துக் கூறுமதே உள்ளுறை உவமம். எனவே, உவமையாற் கொள்ளும் வினை பயன் மெய் உரு வன்றிப் பொருளு வமையாற் கொள்ளப்படுவது. உதாரணம்:- "வெறிகொ ளினச்சுரும்பு மேய்ந்ததோர் காவிக் குறைபடுதேன் வேட்டுங் குறுகும்-நிறைமதுசேர்ந் துண்டாடுந் தன் முகத்தே செவ்வி யுடையதோர் வண்டா மரைபிரிந்த வண்டு," இது வண்டோரனையர் மாந்தர் எனக் கூறுதலான் உவமிக்கப்படும் பொருள் புலப்படாமையின் உள்ளுறையுவம மாயிற்று. இதனுட் காவியும் தாமரையும் கூறுத லான் மருதமாயிற்று. (ருக)