பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-அகத்திணை, புறத்திணை-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உதாரணம்:- பொருளதிகாரம் - அகத்திணையியல் '"ஈன்பருந் துயவும் வான்பொரு நெடுஞ்சினைப் பொரியரை வேம்பின் புள்ளி நீழற் கட்டளை யன்ன வட்டாங் கிழைத்துக் கல்லாச் சிறாஅர் நெல்லிவட் டாடும் வில்லே ருழவர் வெம்முனைச் சீறூர்ச் சுரன்முதல் வந்த வரன்மாய் மாலை உள்ளினெ னல்லனோ யானே யுள்ளிய வினைமுடித் தன்ன வினியோள் மனைமாண் சுடரொடு படர்பொழு தெனவே." [நற்றிணை-ங] () சஅ. மரபுநிலை திரியா மாட்சிய வாகி விரவும் பொருளும் விரவு மென்ப. இதுவும் அது. இ-ள்:- மரபு நிலை திரியா மாட்சிய ஆகி விரவும் பொருளும் விரவும் என்ப- மரபுநிலை திரியாத மாட்சிமையுடைய வாகி விரவும் பொருளும் விரவும் என்ப. அஃதாவது பாலைக்கு ஓதிய பாசறைப் புலம்பற்கண்ணும், தேர்ப்பாகற்குக் கூறு தற்கண்ணும் முல்லைக்குரிய முதற்பொருளும் கருப்பொருளும் விரவுதலாம். இந்நிகான பிறவுங் கொள்க. மரபுநிலை திரியாமையாவது, பாசறைக்கண் வினை முடித்தவழிக் கார்காலம் வந்ததாயின் ஆண்டுக் கூறும் கூற்று. அஃது அக்காலத்தைப் பற்றி வருதலின் மரபு நிலை திரியா தாயிற்று. உதாரணம்:- "வேந்து வினை முடித்த" என்னும் அகப்பாட்டினுள் [ளச] கண்டுகொள்க. இன்னும் 'மாட்சியவாகி விரவும் பொருளும் விரவும்' என்றதனால் பாசறைக் கண் தூது கண்டு கூறுதலும் தலைமகளை இடைச்சாத்து நினைத்துக் கூறுதலும் கொள்க. உதாரணம்:- "நீடின மென்று கொடுமை தூற்றி வாடிய நுதல ளாகிப் பிறிதுமினைந் ருக தியாம்வெங் காதலி நோய்மிகச் சாஅய்ச் சொல்லிய துரைமதி நீயே முல்லை நல்யாழ்ப் பாணமற் றெமக்கே." [ஐங்குறு - சஎஅ] இது தூது கண்டு கூறியது. "பனிமலர் நெடுங்கண் பசலை பாய்த் துனிமலி துயரமோ டரும்பட குழப்போள் கையறு நெஞ்சிற் குசாஅத்துணை யாகச் சிறுவரைத் தங்குவை யாயிற் காண்குவை மன்னாற் பாணவெந் தேரே." [ஐங்குறு-எஎ] இது தூது வீடும் தலைமகன் கூறியது.