பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-அகத்திணை, புறத்திணை-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Gd தொல்காப்பியம் - இளம்பூரணம் ஆயத்தார் கூறியதற்குச் செய்யுள் :- "மாந்தர் மபங்கிய மலைமுதற் சிறுநெறி தான்வரு மென்ப தடமென் றோழி அஞ்சின வஞ்சின வொதுங்கிப் பஞ்சி மெல்லடிப் பரல்வடுக் கொளவே." பாணர் கூறியதற்குச் செய்யுள் :- 2 "நினக்கியாம் பாணரு மல்லே மெமக்கு நீயுங் குருசிலை யல்லை மாதோ நின்வெங் காதலி நன் மனைப் புலம்பி ரித ழுண்க ணுகுத்த பூசல் கேட்டு மருளா தோயே." [ஐங்குறு - ச அய] பார்ப்பார் கூறியதற்குச் செய்யுள்:-- '" துறந்ததற் கொண்டு துயரடச் சாஅய் அறம்புலந்து பழிக்கு மளைக ணாட்டி எவ்வ நெஞ்சிற் கேம மாக வந்தன ளேநின் மடமகள் வெந்திறல் வெள்வேல் விடலைமுந் துறவே." [ஐங்குலு-கூகூகூ] () சுசு. நிகழ்ந்தது நினைத்தற் கேதுவு மாகும். இதுவும் பாலைக்கு உரியதோர் மரபு. உணர்த்துதல் நுதலிற்று. இ - ள் :- நிகழ்ந்தது கினைத்தற்கு ஏதுவும் ஆகும் - முன்பு நிகழ்ந்தது பின்பு விசா ரித்தற்கு ஏதுவும் ஆகும். உம்மை எதிர்மறை. உதாரணம்:- "வேர்பிணி வெதிரத்துக் கால்பொரு நாலிசை கந்துபிணி யானை யயாவுயிர்த்தன்ன என்றூழ் நீடிய வேய்பயிலழுவத்துக் குன்றூர் மதிய நோக்கி நின்றுநினைக் துள்ளினே னல்லனோ யான்முள் ளெயிற்றுத் திலகந் தைஇய தேங்கமழ் திருநுதல் எமது முண்டோர் மதிநாட் டிங்கள் உரறுகுரல் வெவ்வளி யெடுப்ப நிழற்பல உலவை யாகிய மரத்த சுல்பிறங்கு மாமலை யும்பரஃ தெனவே."[நற்றிணை - சஉ] (சச சுஎ. நிகழ்ந்தது கூறி நீலையலுந் திணையே. இதுவும் அது. இ-ள் :-- நிகழ்ந்தது கூறி. நிலையலும் திணை - முன்பு நிகழ்ந்ததனைக் கூறிப் போகா தொழிதலும் பாலைத்திணையாம். '.