பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-அகத்திணை, புறத்திணை-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ருஅ அஃதாவது, தொல்காப்பியம் - இளம்பூரணம் வேவ தளித்திவ் வுலகு; மெலியப் பொறுத்தென் களைந்தீமின் சான்றீர் நலிதருங் காமமுங் கௌவையு மென்றிவ் வலிதி னுயிர்காவாத் தூங்கியாங் கென்னை நலியும் விழும மிரண்டு; எனப்பாடி, இனைந்துகொந் தழுதன ணினைந்துநீ டுயிர்த்தனள் எல்லையு மிரவுங் கழிந்தவென் றெண்ணி யெல்விரா நல்கிய கேள்வ னிவன்மன்ற மெல்ல மணியுட் பரந்தநீர் போலத் துணிபாங் கலஞ்சிதை யில்லத்துக் காழ்கொண்டு தேற்றக் கலங்கிய நீர்போற் றெளிந்து நலம்பெற்றாள் நல்லெழின் மார்பனைச் சார்ந்து."[கலி-நெய்-உரு ] மிக்க காமத்து மிடலாவது, ஐந்திணைக்கண் நிகழும் காமத்தின் மாறுபட்டு வருவது. வற்புறுத்துந் துணையின்றிச் செலவழுங்குதலும், ஆற்றருமை கூறுதலும், இழிந்திரந்து கூறுதலும், இடையூறு கிளத்தலும், அஞ்சிக்கூறுதலும், மனைவி விடுத்தலிற் பிறள்வயிற் சேறலும், இன்னோரன்ன ஆண்பாற்கிளவியும், முன் னுறச் செப்பலும், பின்னிலை முயறலும், கணவனுள்வழி இரவுத்தலைச்சேறலும், பரு வம் மயங்கலும், இன்னோரன்ன பெண்பாற் கிளவியும், குற்றிசையும், குறுங்கலியும் இன்னோரன்ன பிறவுமாகி ஒத்த அன்பின் மாறுபட்டுவருவன வெல்லாம் கொள் ளப்படும். அவற்றுட் சில வருமாறு…… "நடுங்கி நறுநுதலா ணன்னலம்பீர் பூப்ப ஓடுங்கி யுயங்க லொழியக் கடுங்கணை வில்லே ருழவர் விடரோங்கு மாமலைச் செல்லே மாழிக செலவு." [வெண்-இருபாற்பெருந்திணை-க] இது செலவழுங்குதல். "பணையா யறைமுழங்கும் பாயருவி நாடன் பிணையார மார்பம் பிணையத் - துணையாய்க் கழிகாம முய்ப்பக் கனையிருட்கட் செல்வேன் வழிகாண மின்னுக வான்."[லெண்-பெருந்திணை -சு] இஃது இரவுத்தலைச்சேறல். 45 பெரும்பணை மென்றோள் பிரிந்தாரெம் முள்ளி வரும்பருவ மன்றுகொ லாங்கொல் - சுரும்பிமிரும் பூமலி கொன்றை புறவெலாம் பொன்மலரும் மாமயிலு மாலு மலை." [வெண் -இருபாற்பெருந்திணை -சு] இது பருவமயங்கல். பிறவும் வந்தவழிக் கண்டுகொள்ள. மெய்ப்பாட்டியலுள் "இன் பத்தை வெறுத்தல்" (மெய்ப்பாடு - உஉ]முதலாக நிகழ்பவை பொருளாக வருங்கிளவியும் இதன் பகுதியாகக் கொள்க.