பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-அகத்திணை, புறத்திணை-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருளதிகாரம் - அகத்திணையியல் ருரு. முன்னைய நான்கு முன்னதற் கென்ப இது, கைக்கிளைக்குரியதோர் மரபு உணர்த்துதல் நுதலிற்று. இ-ள்:- முன்னைய நான்கும்-மேற்சொல்லப்பட்ட நான்கினும் முந்துற்ற நிலை மை நாண்கும், முன்ன தற்கு என்ப-முற்கூறப்பட்ட கைக்கிளைக்காம் என்ப. அவையாவன:- ஏருா மடற்றிறம், இளமை தீராத்திறம், தேறுதலொழிந்த காம த்து மிகாத்திறம், மிக்க காமத்தின் மாருகாத்திறம் என்பன. ஏறாமடற்றிறம் வெளிப்பட இரத்தலாம். இளமை தீராத்திறம் கலம் பாராட்ட லாம். தேறுதலொழிந்த காமத்து மிகாத்திறம் புணராவிரக்கமாம். மிக்க காமத்தின் மாறாகாத்திறம் நயப்புறுத்தலாம். இவை ஒருவாற்றான் உணர்த்தியவாறு. "கைக்கிளை செந்திறம் பெருந்திணை நோந்திறம் அத்திற மிரண்டு மகத்திணை மயங்கா தத்திணை யானே யாத்தனர் புலவர்." இதனானே கைக்கிளை இன்பம் பயப்ப வருமென்பதூஉம், பெருந்தினை துன்பம் பயப்ப வருமென்பதூஉம் அறிந்துகொள்க. (ருரு) ருசு. நாடக வழக்கினு முலகியல் வழக்கினும் பாடல் சான்ற புலனெறி வழக்கங் கலியே பரிபாட் டாயிரு பாவினும் உரிய தாகு மென்மனார் புலவர். இதுவும், அகத்திணைக்கு இன்றியமையாத செய்யுளை வரையறுத்து உணர்த்துதல் நுதலிற்று. இ-ள்:-- நாடக வழக்காவது, சுவைபட வருவனவெல்லாம் ஓரிடத்து வந்தனவாகத் தொகுத்துக் கூறுதல். அஃதாவது செல்வத்தானும், குலத்தானும், ஒழுக்கத்தானும், அன்பினானும் ஒத்தார் இருவராய்த் தமரின் நீங்கித் தனியிடத்து எதிர்ப்பட்டார் என வும், அவ்வழிக் கொடுப்போரு மின்றி அடுப்போரு மின்றி வேட்கை மிகுதியாற் புணர்ந்தார் எனவும், பின்னும் அவர் களவொழுக்கம் நடத்தி இலக்கண வகையான் வரைந்தெய்தினார் எனவும், பிறவும் இந்நிகானவாகிச் சுவைபட வருவனவெல்லாம் ஒருங்கு வந்தனவாகக் கூறுதல். உலகியல் வழக்காவது, உலகத்தார் ஒழுகலாற்றோடு ஒத்து வருவது. பாடல் சான்ற புலன் நெறி வழக்கமாவது, இவ்விருவகை யானும் பாடல் சான்ற கைக்கிளை முதலாப் பெருந்திணை இறுவாய்க் கூறப்படுகின்ற அகப்பொருள். கலியே பரிபாட்டு அ இரு பாலினும் உரியது ஆகும் என்மனார் புலவர் என்றது, கலியும் பரிபாடலும் என்னும் இரண்டு பாவினும் உரிமையுடைத்தாம் என்று உரைப் பர் புலவர் என்றவாறு. எனவே, இவை இன்றியமையாதன் என்றவாறு. ஒழிந்த பாக்கள் இத்துணை அகப்பொருட்கு உரியவாய் வருதலின்றிப் புறப்பொருட்கும் உரியவாய் வருதலின் ஓதா