பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-அகத்திணை, புறத்திணை-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியம் - இளம்பூரணம் ராயினர். புறப்பொருள் உலகியல்பானன்றி வாராமையின், அது நாடகவழக்கம் அன்றாயிற்று. கூகூ ருஎ.மக்க தலிய வகனைந் திணையுஞ் சுட்டி யொருவர்ப் பெயர்கொளப் பெறாஅர். நடுவணைந்திணைக்குரியதோர் இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று. இ-ள்:--அகண் மக்கள் நுதலிய ஐந்திணையும் - அகத்தினையுள் கைக்கிளைபெருந்திணை ஒழிந்த ஐந்திற்கும் உரியவாகிய நிலமும் காலமும் கருப்பொருளுமன்றி மக்களைப்பற்றி வரும் புணர்தலும் பிரிதனும் இருத்தலும் இரங்கலும் ஊடலும் என்று சொல்லப்பட்ட ஐந்து பொருண்மையும், சுட்டி ஒருவர் பெயர் கொளப் பெறார் - (அவ்வைந்திணைக் கண்ணும் தலைமகனாகப் பலனெறி வழக்கம் செய்ய வேண்டின்,) நாடன் ஊரன் சேர்ப் பன் என்னும் பொதுப்பெயரானன்றி ஒருவர்க்கு உரித்தாகிவரும் பெயர் கொள்ளப் பெறார் புலவர். (ருஎ) குஅ. புறத்திணை மருங்கிற் பொருந்தி னல்ல தகத்திணை மருங்கி ளைவுத லிலவே. இஃது,எய்தாதது எய்துலித்தல் நுதலிற்று. இ-ன்:-- புறத்திணை மருங்கின் பொருந்தின் அல்லது-ஒருவர் பெயர் புறத்திணை மருங்கிற் பொருந்தினல்லது, அகத்திணை மருங்கின் அளவுதல் இல-அகத்திணை மருங் கின் வருதல் இல்லை.(ஏகாரம் ஈற்றசை]. இதனாற் சொல்லியது, ஒருவர்க்குரித்தாகி வரும்பெயர் அகத்திணைபற்றி வரும் கைக்கிளை பெருந்திணையினும் வரப்பெறாது என்பதூஉம், புறத்திணையுள் வரும் என்ப தூஉம், ஆண்டும் பாடாண் பாட்டுக் காமம் பொருளாக வரின் அவ்வழி வரூஉம் என்ப தூஉம் கூறியவாறு, இதனான் அகப்பொருள் ஒருவரைச் சாராது பொதுப்பட வரு மென்பது கொள்க. {ருஅ) முதலாவது அகத்திணையியல் முற்றிற்று.