பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-அகத்திணை, புறத்திணை-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரண்டாவது-புறத்திணையியல். இவ்லோத்து என்ன பெயர்த்தோவெனின், புறத்திணையியல் என்னும் பெயர்த்து. புறப்பொருளுணர்த்துதலாற் பெற்ற பெயர். இது அஃது யாங்கனம் உணர்த்தினாரோ வெனின், மேல் அகத்திணையாகிய எழுதிணை யும் சாற்றி, அவற்றின் புறத்து நிகழ்வன எழுதிணை உணர்த்தினாரென்று கொள்க. அவை,மலையாகிய குறிஞ்சித்திணைப்புதம் கிரைகோடலும் நிரைமீட்டலும் என்னும் வேறுபாடு குறித்து வெட்சி எனவும் காந்தை எனவும் இரண்டு குறி பெறுதலும், காடுறையுலகாகிய முல்லைப்புமஃ மண்ணசை வேட்கையால் எடுத்துச் செலவு புரிந்த வேந்தன்மேல் அடல் குறித்துச் செலவு புரிதலான் அவ்விரு பெருவேந்தரும் ஒரு வினை யாகிய செலவு புரிதலின் அது வஞ்சி என ஒரு குறி பெறுதலும்,புன லுலகாகிய மருதத்துப்புறம் எயில் அழித்தலும் எயில் காத்தலும் என்னும் வேறுபாடு குறித்து உழிஞை எனவும் நொச்சி எனவும் இரண்டுகுறி பெறுதலும், மனலுலகாகிய தெய்தற்பு றம் இரு பெருவேந்தரும் பொருதலாகிய ஒரு தொழிலே புரிதலால் அது தும்பை என ஒரு குறி பெறுதலும், நடுநிலைத்திணையாகிய பாலைப்புறம் வேந்தரேயாயினும் ஏனையோ ராயினும் தமது மிகுதியாகிய வெற்றியைக் குறித்தலால் அது வாகை என ஒரு குறி பெறு தலும், பெருந்திணைப்புறய் நிலையாமையாகிய நோந்திறப் பொருளே குறித்து வருத் லின் காஞ்சி என ஒரு குறி பெறுதலும், கைக்கிளைப்புறம் செந்திறமாகிய ஒரு பொரு ளே குறித்து வருதலின் பாடாண் என ஒரு குறி பெறுதலும் உணர்த்தீயவாறு கண்டு கொள்க. மேலை ஒத்தினுள் "புறத்திணை மருங்கிற் பொருந்தி னல்ல, தகத்திணை மருங்கி னளவுத லிலவே" [அகத்-ருஅ] என அகத்திணைச் செய்யுள் இயற்பெயர்கூறப்பெறா தென்றமையானும் புறத்திணை மருங்கிற் பொருந்தும் என்றமையானும் உலகிய லோடு ஒத்துவரும் காமப்பொருளாகப் பாடாண் பாட்டின்கண் இன்பம் இயற்பெயர் சார்த்தி வரப்பெறு மென்று கொள்க. ஆன்ற சிறப்பி றம்பொரு ளின்பமென மூன்றுவகை நுதலிய துலக மவற்றுள் அறமு மின்பமு மகலா தாகிப் புறனெனப் படுவது பொருள்குறித் தன்றே" (( என்னும் பன்னிருபடலச் செய்யுளுள் புறப்பொருள் அறமும் இன்பமும் அகலாதாகி எனக் கூறினார்; அவர் கூறுதல் வாகைத்திணைக்கண் 'கட்டில் நீத்த பால்' முதலாகக் 'காமம் நீத்தபால்' ஈறாக அறங்கூறுதலில் அச்சார்பாகக் கூறியது மயங்கக் கூறுதலாம். "ஆங்கன முரைப்பி னவற்றது வகையால் பாங்குறக் கிளந்தன ரென்ப வவைதாம் வெட்சி சுரந்தை வஞ்சி காஞ்சி உட்குவரு சிறப்பி னுழிஞை நொச்சி முரண்மிகு சிறப்பிற் றும்பையுள் ளிட்ட மற்னுடை மரபி னேழே யேனை