பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-அகத்திணை, புறத்திணை-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Fir எனவும், தொல்காப்பியம் - இளம்பூரணம் அமர்கொண் மரபின் வாகையுஞ் சிறந்த பாடாண் பாட்டொடு பொதுவிய லென்ப " கைக்கிளை யேனைப் பெருந்திணை யென்றாங் கத்திணை யிரண்டு மகத்திணைப் புறனே" எனவும் புறப்பொருள் பன்னிரண்டு வகைப்படக் கூறில், அகமும் பன்னிரண்டாகி மாட்டேறு பெறுதல் வேண்டும். அகத்திணை ஏழாகிப் புறத்திணை பன்னிரண்டாகில், "மொழிந்தபொருளோ டொன்றவைத்தல் [மரபு ஈய] என்னுந் தந்திரவுத்திக்கும் பொருந்தாதாகி"மிகைபடக்கூறல்" "தன்னானொரு பொருள் கருதிக்கூறல்" [மரபு- அ] என்னுங் குற்றமும் பயக்கு மென்க. அன்றியும் பெருந்திணைப் புறனாகிய காஞ்சி நிலை யாமை யாதலானும், பொதுவிய லென்பது "பல்லமர் செய்து படையுட் டப்பிய நல்லாண் மாக்க ளெல்லாரும் பெறுதலின் திறப்பட மொழிந்து தெரிய விரித்து முதற்பட வெண்ணிய வெழுதிணைக்கு முரித்தே' எனத் தாமே கூறுகின்றாராதலின் மறத்திற்கு முதலாகிய வெட்சியின் எடுத்துக் கோடற்கண்ணும் கூறாமையானும், கைக்கிளையும் பெருந்திணையும் புறம் என்றாராயின் அகத்திணை ஏழ் என்னாது ஐந்தெனல் வேண்டுமாதலானும், பிரமம் முதலாகச் சொல் லப்பட்ட மணம் எட்டனுள்ளும் யாழோர் கூட்டமாகிய மணத்தை யொழித்து ஏனைய ஏழும் புறப்பொருளாதல் வேண்டுதலானும், முனைவன் நூலிற்கும் கலி முதலாகிய சான் றோர் செய்யுட்கும் உயர்ந்தோர் வழக்கிற்கும் பொருந்தாதென்க. ருகூ. அகத்திணை மருங்கி னரிறப வுணர்ந்தோர் புறத்திணை யிலக்கணந் திறப்படக் கிளப்பின் வெட்சி தானே குறிஞ்சியது புறனே உட்குவரத் தோன்று மீரேழ் துறைத்தே. இத்தலைச்சூத்திரம் என் நுதலிற்றோவெனின், வெட்சித்திணைக்கு இடமும் துறை யும் வரையறுத்து உணர்த்துதல் நுதலிற்று. இதனானே திணையும் துறையும் என்று வரும் புறப்பொருள் என்று கொள்க. இ-ள்:- அகத்திணைமருங்கின் அரில் தப உணர்ந்தோர் புறத்திணை இலக்கணம் திறப்படக் கிளப்பின் - அகத்திணையிடத்து மயக்கம் கெட உணர்ந்தோர் புறத்தினை யிலக்கணம் வகைப்படக் கூறின். அகத்திணை மருங்கின் மயக்கம் கெட உணர்தலாவது, மேல் ஒதீய இலக்கணத்தால் மயக்கம் கெட உணர்தல்.

வெட்சிதானே குறிஞ்சியது புறனே வெட்சி என்னும் திணை குறிஞ்சி என்னும் திணைக்குப் புறனாம். வெட்சி குறிஞ்சிக்குப் புறனாயது எவ்வாறெனின், நிரைகோடல் குறிஞ்சிக்குரிய மலைசார்ந்த நிலத்தின்கண் நிகழ்தலானும், அந்நிலத்தின் மக்களாயின் பிறகாட்டு ஆன்