பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-அகத்திணை, புறத்திணை-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருளதிகாரம் - புறத்திணையியல் நிரையைக் களவிற்கோடல் ஒருபுடை குறிஞ்சிக்கு உரித்தாகிய களவோடு ஒத்தலா னும், அதற்கு அது புறனாயிற் றென்க. சூடும் பூவும் அந்நிலத்திற்குரிய பூவாத லானும் அதற்கு அது புறமாம். உட்குவரத் தோன்றும் ஈர் ஏழ் துறைத்தே வெட்சித்துறை உட்குவரத் தோன் றும் பதினான்கு துறையை உடைத்து. துறை பதினான்கும் வருகின்ற சூத்திரத்துள் காட்டுதும். சு. வேந்துவிடு முனைஞர் வேற்றுப்புலக் களவின் ஆதந் தோம்பன் மேவற் றாகும். இது, வெட்சித்திணையாமாறு உணர்த்துதல் நுதலிற்று. இ - ள் :- வேந்துவிடு முனைஞர் வேற்றுப் புலக் களவின் ஆ தந்து ஒம்பல் மேவற்று ஆகும் - வேந்தனால் விடப்பட்ட முனையூரகத்துள்ளார் வேற்று நாட்டின்கண் களவி னானே ஆவைக்கொண்டு பெயர்ந்து பாதுகாக்கும் மேவலை யுடைந்து. கூகூ ஓம்புதலாவது, மீளாமல் காத்தல்.புறப்பொருட் பாகுபாடாகிய பொருளினும் அறத்தினும் பொருள் தேடுதற்குரிய நால்வகை வருணத்தாரினும் சிறப்புடையார் அரச ராதலானும், அவர்க்கு மாற்றரசர்பால் திறைகொண்டபொருள் மிகவும் சிறந்ததாக லானும், அப்பொருள் எய்துங்கால் அவரைப் போரில் வென்று கோடல் வேண்டுதலா னும், போர்க்கு முந்துற இரைகோடல் சிறந்ததாகலானும், இப்பொருள் முன் கூறப் பட்டது. பன்னிரு படலத்துள் 'தன்னுறு தொழிலே வேந்துறு தொழிலென், றன்னவிரு வகைத்தே வெட்சி" என இரண்டு கூறுபடக் கூறினாராயினும், முன்வருகின்ற வஞ்சி, உழிஞை, நும்பை முதலாயின எடுத்துச்செலவு, எயில்காத்தல், போர்செய்தல் என் பன அரசர்மேல் இயன்று வருதலின் வேந்துறு தொழில் ஒழித்து, தன்னுறு தொழி லெனத் தன் நாட்டும் பிறர் நாட்டும் களவின் ஆன்நிரை கோடலின் இவர் அரசாது ஆணையை நீங்கினாராவர். ஆதலால், அவர் அவ்வாறு கூறல் மிகைபடக் கூறலாம். அதனால், பன்னிருபடலத்துள் வெட்சிப்படலம் தொல்காப்பியர் கூறினாரென்றல் பொருந்தாது. என்னை? எனவும், "ஒத்த சூத்திர முறைப்பிற் காண்டிகை மெய்ப்படக் கினந்த வகைய தாகி ஈரைங் குற்றமு மின்றி நேரிதின் முப்பத் திருவகை யுத்தியொடு புணரின் லென மொழிப நுணங்குமொழிப் புலவர்" சிதைவெனப் படுமனை வசையற நாடின் கூறியது கூறல் மாறுகொளக்கூறல் குன்றக் கூறல் மிகைபடக் கூறல் பொருளில் கூறல் மயங்கக் கூறல் கேட்டோர்க் கின்னா யாப்பிற் றாதல் பழித்த மொழியா னிழுக்கக் கூறல்